×
 

குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள்... உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்ஜனை...!

குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் உயர்மட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள் என்று தெரிவித்தார். நாட்டையே உலுக்கி உள்ள இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாட்டில் பயங்கரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலங்களில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹரியானாவில் அதிக அளவு ஆர்.டி.எக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது.

இருப்பினும், இது நடந்த சில மணி நேரங்களுக்குள் தேசிய தலைநகரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தது கடுமையான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்ததாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு... என்ன தான் நடக்குது? சாட்டையை சுழற்றும் அமித்ஷா...!

இதனிடையே, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குநர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது தொடர்பாகவும், சம்பந்தப்பட்டவர் தொடர்பாகவும், பின்னணியில் சதித்திட்டங்கள் குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, டெல்லி கார் வெடிப்பு குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: உண்டியலுக்கும் பாதுகாப்பு இல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்ல... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share