×
 

நாட்டை துண்டாக்கியதே காங்கிரஸ் தான்! அமித்ஷா கடும் குற்றச்சாட்டு...!

நாட்டை துண்டாக்கியதே காங்கிரஸ் கட்சி தான் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்று வைத்து சிறப்புரை ஆற்றுவார். சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு 7 மணி அளவில் உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 1947 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் தனியாக பிரிந்து சென்ற போது நடந்த கொடூரங்களை நினைவுபடுத்தும் வகையில் ஆண்ட தோறும் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நினைவு தினத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. 

இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இண்டிகா பிரிக்கப்பட்டது மிகப்பெரிய கொடூரம் என்றும் அதற்கு காரணமாக மிகப்பெரிய வன்முறை நிகழ்ந்ததாகவும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவித்தார். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்தான் என்று குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: டெல்லியில் முதல் முறையாக.. வரும் 24ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு.. தொடங்கி வைக்கிறார் அமித்ஷா..!

அன்றைய தினம் காங்கிரஸ் நாட்டை பல துண்டுகளாக துண்டாக்கியதாகவும் இந்தியாவின் மகிழ்மையை காங்கிரஸ் கட்சி காயப்படுத்திய தினம் இன்று எனவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அமித் ஷா, இந்தியர்கள் இந்த வரலாற்று கொடூரத்தை ஒரு நாளும் மறக்க மாட்டார்கள் என்றும் பிரிவினையால் ஏற்பட்ட துன்பம் மறக்க முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசியலமைப்பு புக் கையில வச்சிருந்தா பத்தாது படிக்கணும்! ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share