மகளிருக்கு ரூ.3000..! மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை வாக்குறுதிகளை அறிவித்த அமித்ஷா..!!
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 2026 என்பது இந்திய அரசியலில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தத் தேர்தல் மூலம் மாநிலத்தின் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது
முதல் கட்டம் ஏப்ரல் 23, அன்று 152 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29 அன்று 142 தொகுதிகளிலும் நடைபெறும். வாக்குகள் அனைத்தும் மே 4, 2026 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலின் பின்னணியில் 2021 சட்டமன்றத் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அப்போது திரிணமூல் காங்கிரஸ் (TMC) 215 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பாரதிய ஜனதா கட்சி (BJP) 77 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக உயர்ந்தது. தற்போது தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: அராஜகத்தால் பாதிக்கப்படும் மே.வங்கம்! அமித்ஷா குற்றச்சாட்டு!! மம்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு!
தற்போது 2026 தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதிகளை வெளியிட்டார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக வாக்குறுதி வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த ஆறு மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித் ஷா வாக்குறுதி கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மகளிர்க்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் கூட கூட்டணியா? அது எங்களுக்கு தப்பா போயிரும்!! டெல்லியில் உடைத்து பேசிய அமித்ஷா!