×
 

ஒரே நைட்... ஒரே வீடியோ... தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட விஜய்... முதல்வர் கனவில் விழுந்தது மண்ணு...!

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

விஜய் நேற்று இரண்டு முறை ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் 121 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிய கடிதமும் ஆளுநரிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில்,  இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒருவர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒருவரின் ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்துள்ளன. 

அதேசமயம், அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜின் ஆதரவு கடிதம் போலியானது என டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார். அவர், காமராஜுடன் நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று விளக்கக் கடிதம் வழங்கியதுடன், கிண்டி காவல் நிலையம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரில், “குதிரைப் பேரம் நடத்தி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி நடைபெறுகிறது” என்று குற்றம்சாட்டிய தினகரன், ஆதரவு கடிதம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய காமராஜ், “நான் எந்த ஆதரவு கடிதமும் வழங்கவில்லை. நான் இன்னும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கே எனது ஆதரவு தொடர்கிறது” என்றார்.

மற்றொரு புறம், தினகரன் ஆளுநரிடம் அளித்த மனுவில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக பதவியேற்க அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த ஆளுநர், “குதிரைப் பேரம் நடைபெற அனுமதிக்க மாட்டேன்; அதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.  

இதையும் படிங்க: நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

இதனிடையே, அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்து கையெழுத்திடும் வீடியோவை தமிழக வெற்றிக் கழகம் நேற்று நள்ளிரவு வெளியிட்டது.  அந்த வீடியோவில் காரில் அமர்ந்த நிலையில் காமராஜ் கையெழுத்திடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோவை எடுத்தது யார் எந்த இடத்தில் இந்த கையெழுத்து போடப்பட்டது போன்ற விவரங்கள் இல்லை என்றாலும், பரபரப்பான சூழ்நிலையில் இந்த வீடியோ வெளியானது முக்கிய ஆதாரமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வீடியோ விஜயின் முதலமைச்சர் கனவிற்கே மொத்தமாக ஆப்பு வைக்கக்கூடியதாக மாறியுள்ளது. 

பொதுவாக ஆதரவு கடிதத்தை எம்.எல்.ஏ. கட்சி அலுவலகங்களிலேயே அல்லது பொதுவான இடத்திலோ வைத்து அனைவரும் அறியும் படி வெளியிடுவார்கள். ஆனால் அமமுக எம்.எல்.ஏ. அவசர, அவசரமாக காரில் கையெழுத்திட்டுள்ளது பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. டிடிவி தினகரன் கூறுவது போல் காமராஜ் கடத்தப்பட்டாரா? ஏன் காருக்குள் வைத்து கையெழுத்து வாங்க வேண்டும்?, ரகசிய சந்திப்பை வீடியோவாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன?, வீடியோவில் டிடிவி தினகரன் ஆதரவுடனே கையெழுத்திடுகிறேன்? என் பதற்றத்துடன் காமராஜ் பேசுவதை பார்த்தால் அவர் மிரட்டப்பட்டுள்ளார் அல்லது குதிரை பேரம் நடந்துள்ளது போல் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். 

மேலும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இது கட்டாயப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ என நிரூபணமானால், த.வெ.க நிர்வாகிகள் மீது கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்குகள் பாயும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனிடையே, இந்த ஒரு வீடியோ தான் குதிரை பேரம் நடந்ததற்கான ஒட்டுமொத்த ஆதாரம் என்றும், தலைமைக்கே தெரியாமல் அந்த MLA விடம் எழுதி வாங்கியதற்கு சட்டம் என்ன பண்ணும் தெரியுமா? நீதிமன்றம் இப்போ போங்க ! இந்த வீடியோ தான் மொத்த ஆப்பு.., என்றும் அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கருத்து பதிவிட்டுள்ளது தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

குதிரை பேரம் நடப்பது உண்மை என கண்டறியப்பட்டால் அதை காரணமாக வைத்து குதிரை பேரம் நடப்பதை தடுக்க ஆளுநர் சட்டசபையை முடக்க அதிகாரம் உண்டு என்பதால் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழ்நிலையில், தவெக வெளியிட்ட இந்த வீடியோ அவர்களுக்கு எதிராக மாறியுள்ளது குறிப்பிட்டத்தக்கது. 
 

இதையும் படிங்க: வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share