குறுக்கு புத்தியை காட்டும் பாக்., இரவோடு இரவாக போட்ட சதித்திட்டம்.. பஞ்சாப் மக்களுக்கு அச்சுறுத்தல்..!
பஞ்சாப்பில், அமிர்தசரஸ் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்று வருகிறது.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.இதை பொறுக்க முடியாத பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவ நிலைகள், அப்பாவி மக்களின் குடியிருப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடிப்பதோடு, பாகிஸ்தானில் புகுந்து பதில் தாக்குதலும் நடத்தி வருகிறது இந்தியா. இதன் தொடர்ச்சியாக இரவோடு இரவோ இந்தியாவின் 26 நகரங்களை குறி வைத்து குண்டுகளுடன் கொத்து கொத்தாக ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்.
இலக்கை அடையும் முன் நடுவானிலேயே இந்தியா சுட்டு வீழ்த்த ஆரம்பித்தது. பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் மக்களை குறிவைத்து கொத்து கொத்தாக ட்ரோன்கள் வந்தன. அனைத்தையும் நம் ராணுவ வீரர்கள் வானிலேயே இடைமறித்து அழித்தனர். இந்த தாக்குதலுக்கு துருக்கி கொடுத்த YIHA III ரக ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது தெரியவந்தது. சுட்டு பொசுக்கிய ட்ரோன் காட்சிகளை வெளியிட்டு, குடியிருப்பு பகுதியை பாகிஸ்தான் குறி வைத்ததற்கான ஆதாரத்தை இந்தியா காட்டியது.
இதையும் படிங்க: ராணுவ தளபதிக்கு கூடுதல் பவர்.. இனி ஒருத்தன் வாலாட்டக்கூடாது! ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 அதிரடி அப்டேட்!
இதே போல் குஜராத்தின் kachchh என்ற குடியிருப்பு பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் 15 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவி விட்டது. வெடிமருந்துகளை சுமந்து வந்த அந்த ட்ரோன்களை இந்தியாவின் எல்-70 வான் பாதுகாப்பு கவசங்கள் சுட்டு பொசுக்கின. இதே போல் பஞ்சாபின் ஜலந்தரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் காட்சிகளையும் ராணுவம் வெளியிட்டது. ராஜஸ்தானின் போக்ரான் என்ற இடத்தில் பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று சுக்கு நூறாக நொறுக்கப்பட்டது.
ஏவுகணை துண்டாக கிடக்கும் காட்சிகளும் வெளியாகின. பாகிஸ்தான் விடிய விடிய அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை தான் ட்ரோன், ஏவுகணை மூலம் அதிகம் குறி வைத்தது. இந்த நிலையில் போர் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தான் பாக்., எடுத்து வருகிறது; பொறுப்பான முறையில் இந்தியா பதிலடி கொடுக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இன்று அதிகாலையில் பஞ்சாபின் அமிர்தசரஸின் காசா கான்ட் பகுதியை குறிவைத்து பாகிஸ்தானின் 5 ட்ரோன்கள் தாக்க வந்தன. அவற்றை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் பாகிஸ்தானின் தாக்குலை ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள இந்திய ராணுவம், எதிரிகளின் தாக்குதலை முறியடிப்போம் என கூறியுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்களின் பாகங்கள் அமிர்தசரஸின் பல இடங்களில் சிதறி கிடக்கின்றன.
வீடுகள் மீது அதன் பாகங்கள் விழுந்தன. அவற்றை ராணுவத்தினர், போலீசார் சேகரித்தனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். பஞ்சாப் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!