×
 

அமுல் பால் விலை உயர்வு இன்று முதல் அமல்..! என்ன காரணம் தெரியுமா..?

அமுல் பால் நிறுவனம், பால் விலையை உயர்த்திய நிலையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளை திறந்து அமுல் நிறுவனம் பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் அமுல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த விலை உயர்வு மே ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடைசியாக ஜூன் 2024 ஆம் ஆண்டு அமுல் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன்.. தமிழகத்தில் பிரிக்க முடியாதது வாரிசு அரசியலும் இளைஞரணி பதவியும்!

இந்த விலை உயர்வானது இந்தியாவில் உள்ள அனைத்து மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் அமுல் பாலுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் சங்கங்கள் கடந்த ஓராண்டாக விவசாயப் பொருட்களின் விலையை உயர்த்தி வந்ததை கருத்தில் கொண்டு பால் விலையை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வியர்வையால் உலகிற்கு உயிரூட்டிய உழைப்பார்கள்! முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share