உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!
ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள முகேஷ் அம்பானி, தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ரூ.5000 கோடி செலவிட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கும், கோடீஸ்வரர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இடையேயான ஆடம்பர திருமணம் 2024ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள முகேஷ் அம்பானி, தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ரூ.5000 கோடி செலவிட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நகரங்களில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் ஜெட் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன, ஆடம்பரமான உடைகள், காஸ்ட்லியான நகைகள், உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்து வந்த தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஹாலிவுட் டு கோலிவுட் பிரபலங்கள் என திருமணம் செம்ம கிராண்ட்டாக நடைபெற்றது.
ஆனந்த் மற்றும் ராதிகாவின் முதல் திருமணத்திற்கு முந்தைய விழா மார்ச் 2024 இல் ஜாம்நகரில் நடைபெற்றது, அங்கு இவாங்கா டிரம்ப், மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மூன்று நாட்கள் நீடித்த திருமணத்திற்கு முந்தைய விழாவில் ரிஹானா இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஜாம்நகரில் நடந்த இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திற்காக, அம்பானி குடும்பத்தினர் சுமார் ரூ.1200 கோடி செலவிட்டனர். முந்தைய விழா நான்கு நாட்கள் நீடித்த இத்தாலிய கப்பல் பயணத்தில் நடைபெற்றது, மேலும் 800 விருந்தினர்கள் விழாக்களில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அம்பானி பத்து தனியார் ஜெட் விமானங்கள், தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் உயர் ரக வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தார். மும்பையில் நடந்த திருமண நிகழ்விற்காக கிளப் ஒன் ஏர் நிறுவனத்திலிருந்து மூன்று பால்கன் விமானங்கள் உட்பட 2000 விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. இதுமட்டுமல்ல எங்கேயும் இல்லாத வழக்கமாக, இந்த விமானங்கள் வந்து தரையிறங்குவதற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு தற்காலிகமாக சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.
திருமண அழைப்பிதழில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கடவுள் சிலைகள் இருந்தன. சரியான விலை வெளியிடப்படாத போதிலும், அம்பானி ஒரு திருமண அழைப்பிதழுக்காக ரூ.6 முதல் ரூ.7 லட்சம் வரை செலவிட்டதாகக் கருதப்படுகிறது. தற்போது இந்த கல்யாணம் முடிந்து இன்றுடன் ஓராண்டுகள் ஆனாலும், இதுதான் உலகத்திலேயே காஸ்ட்லியான திருமணமாக உள்ளது.
இதையும் படிங்க: ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...!