×
 
☰

மாணவியை ரம்பத்தால் தாக்கிய கொடூரம்..! ஆந்திராவை பதற வைத்த சம்பவம்..! குற்றவாளியின் கால் அகற்றம்.!!

ஆந்திராவில் மாணவியை ரம்பத்தால் தாக்கிய குற்றவாளியின் கால் அகற்ற

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற கொடூரமான தாக்குதல் சம்பவத்தில், பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் சரமாரியாக தாக்கிய குற்றவாளியின் வலது கால் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் பாதுகாப்பு மற்றும் பள்ளி வளாகங்களில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.சம்பவம் நடைபெற்ற பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், 21 வயதான ஹேமந்த் என்ற இளைஞன் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்தார்.

அங்கு படித்துக் கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவியை இலக்காகக் கொண்டு, மரம் வெட்டப் பயன்படும் கூர்மையான ரம்பத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினான். ரம்பத்தின் கூர்மையான பற்கள் மாணவியின் உடலில் பல இடங்களில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியது. மாணவி உதவிக்காக அலறியபோது, வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர். உடனடியாக அவர்கள் மாணவியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் மாணவியின் காயங்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொடூர தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாட்சிகள் வாக்குமூலங்கள் மற்றும் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் ஹேமந்தை அடையாளம் கண்டுபிடித்தனர். விசாரணை தொடங்கியதும் ஹேமந்த் தப்பிக்க முயன்றார்.

இதையும் படிங்க: முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதா? தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பு குழு விளக்கம்!

போலீசார் அவனை சுற்றி வளைத்தபோது, அவன் எதிர்த்து நிற்க முயன்றதாகவும், தப்பியோட முயற்சித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவனை பிடித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹேமந்தின் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, காயங்கள் காரணமாக ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. காலில் உள்ள திசுக்கள் அழுகத் தொடங்கியதால், மேலும் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க வலது காலை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து வலது காலை வெட்டி அகற்றினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹேமந்தின் உடல்நிலை கண்காணிப்பில் உள்ளது. 

 

இதையும் படிங்க: முரசு புயல் எதிரொலி: ஆந்திராவில் 29 ரயில்கள் இயக்கம் பாதிப்பு; விஜயவாடா - கூடூர் வழித்தடம் மூடல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share