ஆசனவாய் வழியாக திருட்டு... சபரிமலையை அடுத்து திருமலையில் வெடித்தது சர்ச்சை... திருப்பதிக்குள் புகுந்து சீல் வைத்த அதிகாரிகள்...!
சி ஐ டி கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் தலைமையில் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்து சீல் வைத்து கொண்டு சென்ற அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் ஏழுமலையான் கோயில் பரக்காமணியில் உண்டியல் காணிக்கை திருட்டு விவகாரம் மாநில அரசால் அமைக்கப்பட்ட சி ஐ டி கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் தலைமையில் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்து சீல் வைத்து கொண்டு சென்ற அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் எண்ணும் பரக்காமணியில் 2023 ஆண்டு மார்ச் மாதம் அங்கு பணியில் இருந்த ரவிகுமார் $ 107 அமெரிக்கா டாலர்களை திருடினார். இதில் சிசிடிவி.கேமிராவில் பதிவாகி கையும் களவுமாக சிக்கினார். இந்த திருட்டு வழக்கில் திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் ரவிக்குமார் பல ஆண்டுகளாக ஆசனவாய் வழியாக காணிக்கை எண்ணும் பணியின் போது திருடி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அப்போதைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ரவிக்குமார் பெயரில் இருந்த அரசு மதிப்பில் ரூ 14 கோடி சொத்துக்களை தேவஸ்தான அதிகாரிகள் எழுதி பெற்று கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் சமூக தீர்வு காணப்பட்டதாக கூறி வழக்கை முடித்து கொண்டனர். ஆனால் இதில் உரிய விசாரணை நடத்தவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து தற்கொலை செய்யும் போலீஸ் அதிகாரிகள்! மூடி மறைக்கும் மிகப்பெரிய சதி! ஹரியானாவில் பரபரப்பு!
இந்த வழக்கில் சிஐடி குழு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பரக்காமணி வழக்கு தொடர்பாக டி.ஜி. ரவிசங்கர் அய்யனார் தலைமையிலான குழு திருமலையில் உள்ள பரக்காமணியை ஆய்வு செய்தனர். பின்னர் அறங்காவலர் குழுவில் கடந்த காலத்தில் இதுதொடர்பாக போடப்பட்ட தீர்மானம், லோக் அதாலாத் மூலம் எவ்வாறு தீர்வு காணப்பட்டது, திருட்டு நடந்த நேரத்தில் இருந்த சி.சி.கேமிரா காட்சிகள், காவல் நிலையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து சீல் வைத்து கொண்டு சென்றனர்.
ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலைகளை செப்பனிடுவதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக தங்கத் தகடுகளை புதுப்பிக்க இடைத்தரகராக செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் புகார் அளித்த நிலையில் அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கேரளா உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராக செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
இந்த அதிர்ச்சியில் இருந்து பக்தர்கள் மீளாத நிலையில், உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதியில் காணிக்கை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு..!! கடுப்பில் வெனிசுலா அரசு எடுத்த விபரீத முடிவு..!!