முன்னாள் காதலன் மனைவிக்கு எச்ஐவி ஊசி... பழிவாங்கிய பெண்..! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!
முன்னாள் காதலனின் மனைவிக்கு எச்ஐவி ஊசி செலுத்தி பெண் ஒருவர் பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்நூலைச் சேர்ந்தவர் போயவசுந்தரா. இவரும் டாக்டர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதல் திருமணம் வரை செல்லவில்லை என தெரிகிறது. அந்த டாக்டர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணும் ஒரு டாக்டர் தான்.
அவர் கர்நூலில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது. தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை ஏற்க முடியாமல் போய வசுந்தரா பழிவாங்க முடிவு செய்துள்ளார். தொடர்ந்து எச்ஐவி நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரியை அவர் பெற்றுள்ளார்.
சோதனை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தேவைப்படுகிறது எனக்கூறி ரத்தத்தை பெற்றதாக தெரிகிறது. பிறகு இதனை தன் முன்னாள் காதலனின் மனைவிக்கு செலுத்த முடிவு செய்துள்ளார் போயவசுந்தரா. பிறகு தனக்கு தெரிந்த நர்ஸ் ஜோதி என்பவரின் இரண்டு மகன்களை பெண் டாக்டர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோத வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... காமக் கொடூரன் போக்சோவில் கைது..!
உடனடியாக போயவசுந்தரா எதிர்பார்த்தபடி அந்தப் பெண் டாக்டர் கீழே விழுந்துள்ளார். அவருக்கு உதவுவது போல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனத்தில் ஏற்றி உள்ளார். அப்போது எச்ஐவி நோயாளியின் ரத்தத்தை பெண் டாக்டருக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெண் டாக்டர் கத்தி கூச்சலிட்டதும் அங்கிருந்து வசுந்தரா தப்பியுள்ளார்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போயவசுந்தரா, நர்ஸ் காங்கே ஜோதி, அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் காதலனை பழிவாங்க நினைத்து அவரது மனைவிக்கு எச்ஐவி உருவாக்கும் ரத்தத்தை பெண் ஒருவர் செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கேரளாவை உலுக்கிய தற்கொலை சம்பவம்..! பெண் அதிரடி கைது..! பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..!