×
 

“அண்ணா காப்பாத்துங்க... எனக்கு குழந்தைங்க இருக்கு..” - நேருக்கு நேர் அதி பயங்கரமாக மோதிய லாரிகள்... தீயில் சிக்கி 4 பேர் துடிதுடித்து பலி...!

ஆந்திராவில்  இரண்டு லாரிகள் எதிரெதிராக மோதி தீ பிடித்ததில்  நான்கு பேர்   தீயில் கருகி பலி

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் பிரதிபாடு மண்டலம், தும்மலபாலேம் பஞ்சாயத்து  போயபாலயத்தில் என்.எச் 16 தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பி.39 டபிள்யூ 1959 பதிவு எண் கொண்ட ஒரு லாரி சிலகலூரிபேட்டையிலிருந்து குண்டூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், போயபாலேமில் டீசல் தீர்ந்துபோய் சாலையின் நடுவில்  எந்த ஆபாய எச்சரிக்கை பலகைகளையும் வைக்காமல்  நிறுத்தப்பட்டிருந்த (ஏ.பி. 07 டி.சி. 8679) என்ற லாரி நின்று கொண்டுருந்ததால்     அதிவேகமாக வந்த அந்த லாரி நிறுத்த முயன்று கட்டுபாட்டை இழந்து  சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி மறுசாலைக்குச் சென்றது.

அதே நேரத்தில் மற்றொரு லாரி குண்டூரிலிருந்து சிலகலூரிபேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த  (ஏபி. 02 டி.இ. 2679)  என்ற லாரி மீது மோதியது. இரண்டு லாரிகள்  மோதி கொண்டதில் டிசல் டேங்கரில் தீ பிடித்து இரண்டு லாரிகளுக்கும் தீப்பிடித்தது. விபத்து நடந்த உடனேயே, லாரியின் கேபினில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு லாரி டிரைவர் "அண்ணா காப்பாற்றுங்கள்.. தீயை அணையுங்கள்.. எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் அண்ணா" என்று அலறியது அங்கிருந்தவர்களை நிலைகுலையச் செய்தது.

உள்ளூர் மக்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோதிலும், தீ வேகமாகப் பரவியதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தீயணைப்பு வாகனமும் போலீசாரும் சம்பவ இடத்திற்குத் தாமதமாக வந்ததால் இரண்டு லாரி கேபின்களில் இருந்த இரண்டு டிரைவர்களும், இரண்டு கிளினர்களும் தீயில் எரிந்தனர்.

இதையும் படிங்க: விடிந்ததுமே அதிர்ச்சி...!! - நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்... 2 பேர் பலி... இருவர் கவலைக்கிடம்...!

இதனால் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டதால்  மாற்று  சாலைக்குத் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது.  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உடுமலையில் பயங்கரம்... நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்... 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share