×
 

திருப்பதி டு கர்னூல் கடும் தட்டுப்பாடு... ஸ்தம்பித்து போன ஆந்திரா... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல் டிசல் தட்டுபாடு வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையம் முன்பு வரிசையில் காத்திருப்பு 

ஆந்திராவில் பெட்ரோல் ,டிசல்   பற்றாக்குறை இல்லை என்று அதிகாரிகள் கூறினாலும் வாகன  ஒட்டிகளுக்கு கள அளவில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தினமும் எரிபொருள் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் மூன்று உள்ளது. இந்த நிறுவனங்கள் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் டேங்கர்களை அனுப்புவதாகவும் இதனால் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அந்தந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஆந்திராவில் முக்கிய நகரங்களான திருப்பதி, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம், கர்னூல் , உள்ளிட்ட பல மாவட்டத்தில்   கையிருப்பு இல்லாததால் ஏற்கனவே பல பெட்ரோல் பங்க் மூடப்பட்டுவிட்டன.

பெட்ரோல் உள்ள பங்க்குகள் மட்டுமே இயங்குகின்றன. அதிலும் இருசக்கர வாகன ஓட்டிகள்,  கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளால் கூட்டம் அலைமோதுகிறது.எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை குறித்து தகவல் அறிந்த சிலர் கேன்களுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு வருகின்றனர். முன்பு தங்களது இருசக்கர வாகனங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு லிட்டர் பெட்ரோல்  வாங்கி வந்தவர்கள் இப்போது வாகனத்தின் முழு டேங்க் பிடிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களிலிருந்து வந்து அதிகமாக வாங்கித் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர்.  பெட்ரோல் , டிசலை நம்பிப் பிழைப்பு நடத்தும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஐந்து லிட்டருக்கு மேல் கொடுப்பதில்லை ஆனால் கார்களில் வருபவர்களுக்கு எவ்வளவு லிட்டர் வேண்டுமானாலும் கொடுப்பதாக   புகார் கூறுகின்றனர். மேலும் பல இடங்களில், பல்வேறு வேலைகளுக்காகப் பல இடங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களும்  பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்கின்றனர்.

விவசாயிகளின் அவலநிலை:

கிராமப்புறங்களில் பல பகுதிகளில் தற்போது ரபி பருவ அறுவடை நடைபெற்று வருகிறது. தங்களது நெல் அறுவடை வந்துவிட்டதில் பெருமகிழ்ச்சியில் இருக்கும் விவசாயிகள், டீசல் தட்டுப்பாடு காரணமாக தங்களது நெல் அறுவடை இயந்திரங்களை வரவழைப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் பல  கிராமங்களில் ஆயிரகணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் வயல்களில் நெல் அறுவடை இயந்திரங்கள் நின்றுவிட்டதால் விவசாயிகள் கேன்களுடன் அந்தந்த பெட்ரோல் பங்க் அருகே காத்திருக்கின்றனர். 

இதையும் படிங்க: "HEAT STROKE"..! வெப்ப அலை முன்னெச்சரிக்கை..! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

ஒரு இருசக்கர வாகனத்திற்கு வெறும் 5 லிட்டர் மட்டுமே:

அனைத்து வாகன டிரைவர்களுக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வோம் என திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர், எஸ்.பி. சுப்பாராயுடு நேரில் ஆய்வு மேற்கொண்டு   பெட்ரோல் நிலையங்களில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேரல்கள் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம்  தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருசக்கர வாகனங்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல், நான்கு சக்கர வாகனங்களுக்கு 30 லிட்டர் டீசல் மற்றும் லாரிகள் டிரக்குகள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 50 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும் வகையில் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டு. வருவதாகவும்  தெரிவித்தனர். மேலும் தேவைக்கு அதிகமாக பெட்ரோல் டிசல் வாங்கப்படுவதால் வழக்காக வரும் இருப்பை விட அதிக தேவை  ஏற்படுகிறது. எனவே தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை. பொது மக்கள் சமூக ஊடகத்தில் வரும் தவறான தகவலை பார்த்து  தேவையை விட அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டாம். இதனால் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படும் சூழல் தவீர்க்கப்படும் என்றார். எங்காவது பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share