இவ்வளவு பணம் எப்படி சம்பாதிச்ச? கோயிலில் வச்சி சத்தியம் பண்ண தயாரா? - மாஜி அமைச்சர் ரோஜாவுக்கு சவால் விட்ட சிட்டிங் எம்.எல்.ஏ...!
முன்னாள் அமைச்சர் ரோஜா தைரியம் இருந்தால் காணிப்பாக்கம் கோயிலுக்கு வந்து சத்தியம் செய்ய முடியுமா? என நகரி எம்.எல்.ஏ. காலி பானுபிரகாஷ் சவால் விடுத்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. காலி பானுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ரோஜா தைரியம் இருந்தால் காணிப்பாக்கம் கோயிலுக்கு வந்து சத்தியம் செய்ய முடியுமா என சவால் விடுத்தார். மேலும் தானும் எந்த நேரம் என்று சொன்னால் அந்த நேரத்திற்கு நானும் உங்களுடன் வந்து சத்தியம் செய்ய தயார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மணல் மற்றும் அரிசி சட்டவிரோதமாகக் கடத்தி செல்வதில் ரோஜா, அவரது சகோதரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா.உங்களால் சத்தியம் செய்ய முடியுமா ? நான் சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறேன். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மணல் கடத்தினால், நாங்கள்தான் அதைப் பிடித்தோம். அப்போது ஓடிப்போனவர்கள் இப்போது நாடகம் ஆடுகிறார்கள். ரோஜா தனது ஊழல் பழக்கங்களை எங்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார்.
ரோஜாவின் கண்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கவும்.
நகரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கான சாலைகளை அமைத்துள்ளேன், ஆழ்துளை கிணறுகள், கால்வாய்கள் மற்றும் பிற வளர்ச்சிகளை செய்துள்ளோம். ரோஜா நகரியின் கிராமங்களுக்குச் சென்றால் அவை தெரிந்து கொள்ளலாம். பொய் சொல்லி நேரத்தை செலவிடும் நாட்கள் போய்விட்டன என்பதை ரோஜா நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: டைம் பாஸுக்கு அரசியலுக்கு வராதீங்க - தவெக தலைவர் விஜய்க்கு நடிகை ரோஜா அட்வைஸ்...!
சமூக ஊடகங்களிலும் உங்களுக்குத் தெரிந்த சேனல்களிலும் பொய்களைச் சொன்னால், அது உண்மையாகாது. ₹ 12 ஆயிரத்திற்கு வாடகை வீட்டில் இருந்த உங்களுக்கு, இப்போது நகரி, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் வீடுகளைக் கட்டியுள்ளீர்கள். இதையெல்லாம் நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்.
ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதன் பிரதிபலிப்பு நீங்கள். தவறு பண்ணவங்க ஜெயிலுக்குப் போகணும் அது யாராக இருந்தாலும் சரி. மணல் கடத்தப்பட்டால், வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்புவோம். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தை கொண்டு வர போலீசாருக்கு கூறியுள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: கச்சத்தீவை தாரை வார்த்ததே திமுகதான்.. இப்ப என்ன அக்கறை? இபிஎஸ் சரமாரி கேள்வி..!