×
 

ரூ.17 ஆயிரம் கோடி லோன் மோசடி! இதெல்லாம் என்ன கணக்கு? ED அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்..!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி விசாரணைக்காக ஆஜராகினார்.

17 ஆயிரம் கோடி லோன் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு தொழிலதிபர் அணில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதன் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

அனில் அம்பானி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் இளைய மகனும், முகேஷ் அம்பானியின் தம்பியும் ஆவார். ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர். இந்த குழுமம் 2006-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரிவினையைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.

 அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் நிதி சேவைகள், உள்கட்டமைப்பு, மின்சார உற்பத்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டன. ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பணக்காரராக இருந்த இவர், 2008-ல் ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி 42 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கினார்.

இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

இருப்பினும், நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள், கடன் பிரச்சனைகள் மற்றும் தொழில் நஷ்டங்கள் காரணமாக 2020-ல் இவர் திவால் நிலைக்கு சென்றதாக அறிவித்தார். தற்போது, அவரது நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 24 ஆம் தேதி தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனிடையே, 17 ஆயிரம் கோடி லோன் மோசடி வழக்கில் நீரில் ஆஜராகுமாறு அணில் அம்பானிக்கு சமன் அனுப்பப்பட்டு இருந்தது. இதன் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக தொழிலதிபர் அனில் அம்பானி இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மழைக்கால கூட்டத் தொடர்: என்னென்ன செய்யணும்? திமுக எம்.பிகளுக்கு முதல்வர் அறிவுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share