×
 

உங்களால நிறைய பேர் செத்து இருக்காங்க... தவெக ஆனந்தை எச்சரித்த பெண் போலீஸ் அதிகாரி...!

காவல்துறையினர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டாம் என தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆனந்தை பெண் போலீஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு ஏராளமான தவெக தொண்டர்கள் கதவை உடைத்துக் கொண்டு தள்ளு, முள்ளில் ஈடுபட்டதால் தற்போது க்யூ ஆர் கோர்ட் கூப்பன்களை பரிசோதிக்காமலேயே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் கடுமையாக காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம் மக்கள் சந்திப்பு தள்ளி போடப்பட்ட நிலையில், அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ளரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்காது என்பதால், புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். ஆனால் புதுச்சேரி காவல்துறையோ ரோடு ஷோ நடத்த அனுமதி தர முடியாது, வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து இன்று தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறுகிறது. புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வருபவர்கள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இன்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான தவெக தொண்டர்கள் பொதுக்கூட்டம் நடக்கும் நுழைவாயில் முன்பு குவிந்த நிலையில், 8 மணிக்கு மேலாக பாஸ் இருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கரூர் பெருந்துயரம்... தவெக மாநில நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..! சிபிஐ அதிரடி...!

கூட்டம் உண்டியடைத்த நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க கோரி தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆனந்தை பெண் காவல் அதிகாரி கடுமையாக எச்சரிப்புள்ளார். உங்களால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம் எனவும் கடுமையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜயை பாக்கணுமா? மக்கள் சந்திப்பில் செக்... புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share