×
 

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு! பாஜக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உறுதியானது தனிக்கட்சி

இந்த பரபரப்பான சூழலில் அண்ணாமலையின் ராஜினாமாவை தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக் கொண்டார்.

தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் கட்சித் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் புதிய அரசியல் கட்சியை தொடங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் டெல்லி சென்று கட்சியின் தேசிய தலைமை நிர்வாகிகளை சந்தித்ததாக கூறப்பட்டது. அப்போது தனது முடிவை கட்சி தலைமையிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அண்ணாமலையை கட்சியில் தக்கவைக்க பாஜக மூத்த தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், தமிழக அரசியலில் தனித்த அரசியல் பாதையை உருவாக்க வேண்டும் என்ற தனது முடிவில் அண்ணாமலை உறுதியாக இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு பை பை சொன்னார் அண்ணாமலை! தனிக்கட்சி விவகாரம்! 12 மணிக்கு வெளியாகும் அதிரடி அறிவிப்பு!

இதற்கிடையில், பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அண்ணாமலை கடிதம் அளித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த கடிதம் கட்சித் தலைமையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அவரது ராஜினாமாவை தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டதாகவும், அதனை தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பலரும் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களில் இந்த கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளதால், அண்ணாமலை விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும், புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்பதையும், தமிழக அரசியலில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது! நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share