தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!
தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம் என செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த அட்டையில் மாணவர்களின் சாதி சான்றிதழ் விவரங்களும் இணைக்கப்படும் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில், பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கினார். மாணவர்களின் பெயர், முகவரி, சாதி சான்றிதழ் விவரம், ரத்த வகை (பிளட் குரூப்), ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே அடையாள அட்டையாக இது வழங்கப்படும்.
முதற்கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக பிற வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி குறிப்பிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததற்கு, முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!
தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம் என்று கூறினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வியாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் இந்த அரசுக்கு முட்டு கொடுத்து வருவதை பார்த்தாலே தெரிகிறது என்றும் தெரிவித்திருக்கிறார். CM-sir இதனை ஒரு போதும் தமிழ்நாட்டில் அனுமதிக்கவும் கூடாது, தொடரவும் கூடாது எனவும் தீண்டாமைக்கு தீனியும் போட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்பதுரை வெற்றி செல்லாது... அதிரடி தீர்ப்பு..! தலையில் இடியை இறக்கிய ஹைகோர்ட்..!