என்ன CM.. பாஜகவுக்கு விசுவாசமா.? ஆதரவும், கைதும்..! அப்பாவு விமர்சனம்..!!
நீட் விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு சரமாரி கேள்விகளை முன்னாள் சபாநாயகர் அப்பாவு முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்களில் நீட் போன்ற தேர்வு நடைபெறுவதை எந்த மாநில அரசும் எதிர்ப்பதில்லை என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதுபோல் மாநில அரசுகளின் மாநில வரிப்பணத்தில் உருவாக்கி இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதை கலைஞர் கருணாநிதி முதல் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து 10 ஆண்டு காலமாக எதிர்ப்பதோடு, தமிழக சட்டமன்றத்திலும் நீட் தேவையில்லை என இரண்டு முறை ஏக மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்த பெருமை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு என்றார்.
இந்த உண்மையை புரிந்து கொண்ட இந்திய இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறவழியில் போராடி வருவதையும், மத்திய அரசு காட்டுமிராண்டித்தனமாக அடக்கி, ஒடுக்குவதையும் த.வெ.க அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் CM sir ? என கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், டெல்லி-நீட் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் மாணவர்கள், இளைஞர்களை கொடூரமாக அடக்கி, ஒடுக்கி கைது செய்வது ஏன் ? என்றும் அவர்களை மெரினாவில் போராட அனுமதிக்காதது ஏன்.? பாஜக ஆட்சிக்கு காட்டும் விசுவாசமா.? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார். இன்று இந்திய இளைஞர்கள் ஒன்றிய அரசின் அடக்குமுறையை தாங்கி பலநாள் உணவு, உறக்கமின்றி, உயிரை பணயம் வைத்து ஜனநாயக முறையில் போராடி வருவதை தமிழ்நாட்டில் கண்டு கொள்ளாத த.வெ.க அரசு இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து கொண்டாடி மகிழ்வது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனாதைப் பிணமாக மாற்ற முயற்சியா? சபரிவர்மன் மரணத்தில் வெடித்த சர்ச்சை..! அப்பாவு சரமாரி கேள்வி..!
“ஜனநாயகன் " பட வசூலுக்காக கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை கேட்டு பெறாமலும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க துணிவு இல்லாமலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்வதுதான் வாக்களித்த மக்களுக்கு தாங்கள் காட்டும் பிரதிபலனா? என்றும் தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்பது போல் காங்கிரஸ் -க்கும், பாஜகவுக்கும் விசுவாசம் காட்டுவதற்காக, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பது தான் "ஜனநாயகமா" CM sir என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: சட்டம் தெரியாதா.? ஆணவ வசனம் எப்படி வந்துச்சு..? முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய அப்பாவு..!!