×
 

ஜி ராம் ஜி மூலம் ரூ. 5000 கோடி கூடுதல் செலவு... ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு..!

ஆளுநர் ரவி தனது உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெயில் அடைப்புச் செய்த நிலையில் சபாநாயகர் அப்பாவு அவரது உரையை வாசித்துள்ளார்.

ஆளுநர் ரவியின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தமிழைக் காக்க வேண்டும் என்பதில் எந்தவித சமரசமும் இல்லை இரு மொழிக் கொள்கையை கண்ணாக பாதுகாத்து வருகிறது. தமிழக அரசு மத்திய அரசின் ஜி ராம்ஜி திட்டத்தின் மூலம் 5,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மதுரை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலுக்கான இரண்டாம் கட்ட நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது என ஆளுநர் உரையில் குறிப்பிட்டதை சபாநாயகர் அப்பாவு வாசித்துள்ளார். தமிழகத்திற்கான நிதியை தராமல் மத்திய அரசு இழுத்துடித்து வருகிறது என்றும் கூறினார். 

4,432 பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. 100 நாட்கள் வேலை திட்டத்தை மத்திய அரசு சிதைத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் தனியார் துறையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்றும் தொழிலாளர் நலத்துறை நடத்தப்பட்ட இரண்டு லட்சம் முகாம்கள் மூலம் மூன்று லட்சம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜன.20ல் தமிழக சட்டப்பேரவை... ஆளுநர் மாண்பை காப்பார் என நம்புகிறோம்... சபாநாயகர் அப்பாவு பேட்டி..!

தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 41 புதிய அரசு தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. புதிதாக அறிவிக்கப்பட்ட கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 80814 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் ஐந்து ஆண்டு 22 லட்சம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பொய் புகார் சொல்லாதீங்க..! திமுக ஆட்சிக் காலங்களில் 43 நீர்த்தேக்கங்கள்... முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share