×
 

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரௌடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தனது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது மற்றும் குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார், விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கியது. மொத்தம் 14 பேருக்கு ஜாமீன் கிடைத்தது.ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜாமீன் வழங்கப்பட்டது தவறு என்றும், வழக்கின் தீவிரத்தை கீழ் நீதிமன்றம் சரியாக பரிசீலிக்கவில்லை என்றும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தும் அபாயம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்ததால் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே. ராஜசேகர், ஜாமீன் பெற்றவர்களில் அஞ்சலை மற்றும் மலர்கொடி ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உறுதி செய்தார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... ஜாமீன் ரத்துக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

ஆனால் அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட 12 பேருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜாமீன் ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்போ செந்தில் இதுவரை பிடிபடவில்லை. அவர் வெளிநாட்டில் தலைமுறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..!! ஜாமீன் ரத்தானவர்களுக்கு கெடு.. ஹை கோர்ட் அதிரடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share