×
 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்! ஆயுதம் கடத்தவும், ஊடுருவவும் உதவி!! அருணாச்சலில் 2 பேர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இட்டாநகர், டிசம்பர் 13: அருணாச்சல பிரதேசத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு மேலும் இரு நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஹிலால் அகமது (26) என்ற இளைஞர். மற்றொருவர் சாங்லாங் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதுகள் அருணாச்சலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி இட்டாநகர் போலீசாரின் தகவலின் அடிப்படையில், மேற்கு சியாங் மாவட்டம் ஆலோ பகுதியில் போர்வை விற்று வந்த ஹிலால் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி பாப்பும் பாரே மாவட்டத்தில் இருந்து ஆலோ வந்திருந்தார். வர்த்தகக் கண்காட்சியில் போர்வை விற்று வந்த இவர், முக்கிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் படிங்க: கப்பல் படை ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு விற்பனை!! கர்நாடகாவில் உளவு பார்த்த இருவர் கைது!!

இதேபோல், சாங்லாங் மாவட்டம் மியோ பகுதியில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துள்ளனர்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் அகமது மாலிக் மற்றும் சபீர் அகமது மீர் ஆகியோர் இட்டாநகர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் டெலிகிராம் மூலம் ராணுவம் மற்றும் ராணுவ முகாம்கள் குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவவும், ஆயுதங்கள் கடத்தவும் சபீர் உதவியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் கைதுகள் அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளன. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பச்சையப்பாஸ் மாணவனை துடிக்க துடிக்க வெட்டி சாய்த்த கொடூரம்... நந்தனம் காலேஜ் மாணவர்கள் அதிரடி கைது...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share