×
 

கரூர் மக்களுக்கு விஜய் மேல எந்த கோபமும் இல்ல.. அத அவங்களே சொல்லிட்டாங்க..!! அருண்ராஜ் தகவல்..!

கரூர் மக்களுக்கு தவெக தலைவர் விஜய் மீது எந்த கோபமும் இல்லை என அவர்களே கூறியதாக கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் மற்றும் கட்சியினர் மீது கரூர் மக்களுக்கு எந்தவித கோபமும் இல்லை என அவர்களே தெரிவித்துள்ளதாக கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 27ம் தேதி அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோக சம்பவத்தில் 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜய்யின் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் அதிக அளவில் கூடியதால் இந்த துயரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் கடந்த இரு நாட்களாக 33 குடும்பங்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார். மீதமுள்ள குடும்பங்களுடன் இன்று பேச திட்டமிட்டுள்ளார். இந்த உரையாடல்களின் போது விஜய், "என்னதான் நான் ஆறுதல் கூறினாலும் உங்களுக்கு அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது, என்ன நடந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன். விரைவில் நான் நேரில் வந்து சந்திக்கிறேன்" என கூறியிருந்தார். அப்போது அந்த மக்களும், "உங்கள் மீது எந்த தவறும் கிடையாது. நீங்கள் எங்களுக்கு ஆறுதல் கூறியதாக நாங்கள் தைரியமாக இருக்கிறோம். நீங்களும் தைரியமாக இருங்கள். உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம். எனவே தொடர்ந்து முயற்சித்து வாருங்கள் என ஊக்கமளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரூர் துயரச் சம்பவம்: நிர்வாக அலட்சியமே முழு காரணம்.. பாஜக எம்.பி.க்கள் குழு அறிக்கை?

மேலும் எவரும் விஜய் அல்லது கட்சியினர் மீது வெறுப்பு தெரிவிக்கவில்லை. இங்குள்ள மக்கள் உண்மையை அறிந்து நம்புகின்றனர். விசாரணை முடிந்ததும் உண்மை வெளியாகும்” என கரூரில் முகாமிட்டுள்ள கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும், விஜய் நேரில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே இது சாத்தியமாகும் என கட்சி தெரிவித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு (டிஜிபி) மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவெக கட்சி, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது. விரைவில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திப்பார் என அருண்ராஜ் கூறினார்.

இந்த சம்பவம் விஜய்யின் அரசியல் பயணத்தில் பெரும் சவாலாக அமைந்துள்ளது. ரசிகர்களின் உற்சாகம் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்து, கட்சியின் பிரச்சார ஏற்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வரலாம். தவெக தொண்டர்கள் இந்த துயரத்திலிருந்து மீண்டு, கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், கரூர் மக்களின் ஆதரவு விஜய்க்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. விசாரணை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம்.. இன்று கரூர் செல்கிறார் கமல்ஹாசன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share