×
 

பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

பட்ஜெட் பெயர் மாற்றபட்டியல் போல் இருப்பதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்

தமிழக வெற்றிக்கான அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை பெயர் மாற்றப்பட்டியல் போல் இருக்கிறது என்று சட்டசபையில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். உரிமைத்தொகை உயரவில்லை ஆறு சிறந்த என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றத்தில் இருப்பதாக கூறினார் செய்வதை மட்டும்தான் சொல்வோம் எனக் கூறி அள்ளித் தெளிந்த வாக்குறுதிகளை தமிழக வெற்றிக்கான அரசு மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் 

தமிழக வெற்றி கழக அரசு தாகம் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளையும் இலவச பயணம் என்ற விடியல் பயணத்திட்டம் அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் இன்றையது என்றும் தேர்தல் புதிய அரசியல் திட்டங்களை தேடுகிறேன் ஆனால் கிடைக்கவில்லை.  தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று தெரிவித்தார் 

இதையும் படிங்க: சபாநாயகர் சட்டத்தின் காவலரா..? மதத்தின் பிரதிநிதியா..? நயினார் தாக்கு.!

அவருக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஐந்து ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம் என்றும் ஓபிஎஸ் செல்வதை போல் மூன்று மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது எனவும் கூறினார். நீ பன்னீர்செல்வன் இடம் மாறி இருப்பதற்காக எவ்வளவு துதி பாட வேண்டும் என்று அவசியம் இல்லை என செங்கோட்டையன் கூறினார். OPS இடத்தை மட்டுமல்ல, இதயத்தையும் இடம் மாறிவிட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மேலும் சட்டைப்பையில் ஸ்டாலின் படம் இருப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் விமர்சித்தனர். 

இதையும் படிங்க: "சட்டம் ஒழுங்கில் ஆமை வேகம்"..! கோட்டை விடாதீங்க CM..! வானதி சீனிவாசன் விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share