#BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு... நள்ளிரவில் நடந்தது என்ன?
இன்று முதல் 3 நாட்களுக்கு தொடங்கவிருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
இன்று முதல் 30 வரை நடைபெறவிருந்த 3 நாள் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (UFBU) இடையே செப்டம்பர் 27 இரவு 9:30 மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளித்து 5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்துவது குறித்தும், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய தீர்வுகளைக் காண்பதற்கும் IBA மற்றும் UFBU உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு உடனடியாக அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஆர். சேகரன் மற்றும் UFBU வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், உயர்மட்ட அதிகாரிகளுக்கான 'செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை' (PLI) திட்டத்தில் மாற்றம் செய்வது மற்றும் 2024 மார்ச் 8 ஒப்பந்தத்தில் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் குறித்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளின் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!
இதையும் படிங்க: ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!