×
 

குடியுரிமை கிடைக்கிறது முன்னாடி வாக்குரிமை எப்படி? டெல்லி கோர்ட் கிடுக்குப்பிடி கேள்வி?! சோனியா காந்திக்கு சிக்கல்!

இந்திய குடியுரிமை பெறும் முன், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியாவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்திய அரசியலின் ‘சூப்பர் பவர் சென்டர்’ என்று அழைக்கப்பட்ட சோனியா காந்திக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காரணம் – இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று வருடம் முன்பாகவே, 1980-ம் ஆண்டே அவரது பெயர் டெல்லி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது எப்படி? இந்த 44 ஆண்டுகள் பழைய “ரகசியம்” இப்போது மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, சோனியாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

என்ன நடந்தது?
இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, 1968-ல் ராஜீவ் காந்தியை திருமணம் செய்தார். அதிகாரப்பூர்வமாக இந்திய குடியுரிமை பெற்றது 1983-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி தான். ஆனால் 1980-ல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் “Sonia Gandhi” என்ற பெயர் இடம் பெற்றிருந்ததாக புகார் எழுந்தது. 
அப்போதே தேர்தல் ஆணையம் இதை கண்டுபிடித்து 1982-ல் பெயரை நீக்கியது. ஆனால் “குடியுரிமை இல்லாத போது வாக்காளர் பட்டியலில் பெயர் எப்படி வந்தது?” என்ற கேள்வி இப்போது வரை மர்மமாகவே இருந்து வந்தது.

டெல்லியைச் சேர்ந்த விகாஸ் திரிபாதி என்பவர் இதே கேள்வியை எழுப்பி, 2023-ல் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “இது தேர்தல் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அரசு ஆவணங்களை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றங்கள்” என்று சோனியா மீது FIR போடக் கோரினார். 

இதையும் படிங்க: லோக்சபாவில் இன்று SIR விவாதம்! இறங்கி அடிக்க தயாராகும் ராகுல்காந்தி! பதற்றத்தில் பாஜக!

செப்டம்பர் 2024-ல் நீதிபதி வைபவ் சவுரஷியா இந்த மனுவை தள்ளுபடி செய்து, “ஏற்கனவே தேர்தல் ஆணையம் பெயரை நீக்கிவிட்டது, போதுமான ஆதாரம் இல்லை” என்று கூறி வழக்கை முடித்துவிட்டார்.

ஆனால் விகாஸ் திரிபாதி சும்மா இருக்கவில்லை. உடனடியாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, “இது தீவிரமான குற்றச்சாட்டு. சோனியா காந்தி இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறி, சோனியாவுக்கும் டெல்லி போலீசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் வெளியான சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் #SoniaVoterIDScam ட்ரெண்டாகி, பலர் “இந்தியாவையே 10 வருஷம் ஆண்ட சோனியா குடியுரிமை இல்லாமல் வாக்களித்தாரா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

காங்கிரஸ் தரப்பு இதை “40 வருஷம் பழைய அரசியல் பழி வாங்கும் நாடகம்” என்று நிராகரித்தாலும், பாஜக ஆதரவாளர்கள் “ராகுலின் தாயார் இந்தியரே இல்லையா?” என்று தீயாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த வழக்கு அடுத்து எங்கு செல்லும்? சோனியா காந்தி நேரில் ஆஜராக வேண்டிய சூழல் வருமா? 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்றிருக்கும் நிலையில், இந்த 44 ஆண்டு பழைய பழைய கோப்பு மீண்டும் திறக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இன்னைக்கு மோடி! நாளைக்கு ராகுல்காந்தி!! லோக்சபாவில் விவாதம் துவக்கி வைப்பு!! கவுன்டவுன் ஸ்டார்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share