×
 

ஒரே டிராபிக்ப்பா..! பெங்களூருவில் வீட்டிற்கு பறந்தே வரும் மளிகை சாமான்கள்..!

டிராபிக் ஜாம் காரணமாக பெங்களூரு வாசிகள் அவதிப்பட்டு வரும் சூழலில் வீட்டிற்கே ட்ரோன் மூலம் மளிகை சாமன்களை டெலிவரி செய்யும் திட்டத்தை துவங்கி உள்ளது கேட்டட் கம்யூனிட்டி ஒன்று.. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் தான் பிரெஸ்டீஜ் ஃபால்கன் சிட்டி. இது கனகபுரா சாலையில் அமைந்துள்ளது. இதில் 2,520 உலகத்தரம் வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒரு பெரிய கிளப்ஹவுஸ், ஒரு பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ஒரு பெரிய கலாச்சார மற்றும் மாநாட்டு மையம் போன்ற வசதிகள் இங்கு உள்ளன. பெங்களூரின் மிகப்பெரிய ஃபாராம் மால் இங்கு உள்ளது. 2520 குடியிருப்புகள் என்றால் அங்கு எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும்? இதன் காரணமாகவே பிரெஸ்டீஜ் ஃபால்கன் நகரவாசிகள் இப்போது மளிகைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் டெலிவரி மூலம் பெற துவங்கி உள்ளனர்.

பிரெஸ்டீஜ் ஃபால்கன் சிட்டி அசோசியேஷன், எக்ஸ்பிரஸ் டெலிவரியை மையமாக கொண்டு செயல்படும் பிக்பாஸ்கெட் மற்றும் ட்ரோன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ஸ்கை ஏர் மொபிலிட்டியுடன் இணைந்து செயல்பட துவங்கி உள்ளது. இதன் மூலம் ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் ட்ரோன்களைப் பயன்படுத்தி டெலிவரிகளை வீட்டிற்கே அனுப்பும் முறையை சோதனை முறையில் செயல்படுத்தி உள்ளது. இந்த முயற்சி சேவையை விரைவுபடுத்துதல், மற்றும் கேட்டட் கம்யூனிட்டிக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஒரு வார பழக்கத்தில் மலர்ந்த காதல்.. 13 ஆண்டு திருமணத்திற்கு குட்பை.. இன்ஸ்டா காதலனுடன் ஓடிய மனைவி..!

2,520 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள ஒரு கேட்டட் கம்யூனிட்டிக்குள் முன்பு பல டெலிவரி இளைஞர்கள், அடிக்கடி பயணங்களை மேற்கொண்டனர். தற்போது ட்ரோன்களைப் பயன்படுத்துவது அவர்களின் பைக் இரைச்சலையும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது என்றும் கூறினர். பிரெஸ்டீஜ் ஃபால்கன் சிட்டியின் குடியிருப்பு வளாகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பிக்பாஸ்கெட் மையம் உள்ளது. கேட்டட் கம்யூனிட்டிக்கு தேவையான அனைத்து ஆர்டர்களையும் இங்கே தான் ஆர்டர் செய்யப்படுகிறது. அனைத்து ஆர்டர்களும் ஸ்கை ஏர் மூலம் இயக்கப்படும் ட்ரோன்கள் வசதி வழியாகவே அனுப்பப்படுகின்றன. 

இந்த ட்ரோன் சேவை டிஜிசிஏ ஒப்புதலைப் பெற்றுள்ளன என பெங்களூரு அபார்ட்மென்ட் கூட்டமைப்பு தெற்குத் தலைவரும் பிரெஸ்டீஜ் பால்கன் நகர குடியிருப்பாளர் நல சங்கத்தின் (RWA) உறுப்பினருமான அவினாஷ் குமார் தெரிவித்தார். 7 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள ஆர்டர்கள் ட்ரோன் டெலிவரி மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ட்ரோன்களை அனுபவம் உள்ள இளைஞர் ஒருவர் ஆப்ரேட் செய்கிறார். ஒவ்வொரு டெலிவரியும் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும், மேலும் சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என்றும் கூறினார்.

தற்போது ஸ்கை ஏர் இரண்டு ட்ரோன்களுடன் இயங்குகிறது, விரைவில் வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய 25-30 ட்ரோன்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு டெலிவரி ரைடர் பொதுவாக ஒரு நாளைக்கு 30 டெலிவரிகளை நிர்வகித்து, சுமார் ₹ 800 சம்பாதிக்கிறார், அதே நேரத்தில் ஒரு ட்ரோன் ஒரு நாளைக்கு 60 ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியும் என்றும் கூறினார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் பெங்களூரு முழுவதும் மேலும் 20 வீட்டுவசதி சங்கங்களுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்த ஸ்கை ஏர் திட்டமிட்டுள்ளதாக குமார் கூறினார். ஜெயநகர், பன்னேர்கட்டா சாலை மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற பகுதிகளை இலக்காகக் கொண்டு இந்த விரிவாக்க உள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் பெங்களுருவில் மளிகை ஜமான்கள் வாஙக் ட்ராபிக் பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘பெரிய நகரில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது இயல்புதான்’.. கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share