×
 

மறக்க முடியுமா..!! பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்.. வெளியான முக்கிய தகவல்..!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 18வது ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முதல் முறையாக ஆர்.சி.பி அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் தனது 18 ஆண்டுகால கனவை நினைவாக்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பிய பெங்களூர் அணி கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

ஆர்.சி.பி அணியை வரவேற்க விதான் சவுதா பகுதியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். மேலும் உயர் நீதிமன்ற கட்டடம் மற்றும் மரங்கள் மீது ஏறி நின்றும் வீரர்களை வரவேற்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இதையும் படிங்க: 2 நிமிஷம் கூட நிக்கல... இதுவே ஜெ.வா இருந்திருந்தா? நொந்துபோன அதிமுகவினர்

போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனையடுத்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். 

இதற்கிடையே இந்த கூட்ட நெரிசல் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றது. இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பாராட்டு விழாவிற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. விரிவான போலீஸ் பாதுகாப்பு இல்லை. மைதானத்திற்கு எவ்வளவு ரசிகர்கள் வருவர் என்பதை கணிக்க உளவுத்துறை, பெங்களூரு அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தவறிவிட்டது. 

மைதானத்திற்குள் வெறும் 79 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு போலீசார் இல்லை. சரியான ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. மாலை 3:25 மணிக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று அவர்களுக்கு தெரிந்தும், நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

இதனிடையே பெங்களூரு அணி நிர்வாகம் தனது 'எக்ஸ்' பக்கத்தில், வீரர்கள் திறந்த பேருந்தில் பேரணியாக அழைத்து செல்லப்படுவர் என்று பதிவிட்டதே கூட்டம் அதிகரிக்க காரணம் என்றும் பெங்களூரு அணி நிர்வாகம் - கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் போலீஸ் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு பெங்களூரு அணி நிர்வாகம், டி.என்.ஏ. நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்தான் நேரடி காரணம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி..! பற்றி எரியும் ரயில்.. சூழ்ந்த கரும்புகை.. நடந்தது என்ன..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share