வருகிறது பாரத் டாக்சி!! ஓலா, ஊபருக்கு பெரிய அடி!! நாடு முழுவதும் ஒரே ஆப்!! மத்திய அரசு தீவிரம்!
ஒரே ஆப்பில் பதிவு செய்து குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணிக்க வசதியாக 'பாரத் டாக்ஸி' உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கான சோதனை நடந்து வருகிறது.
தனியார் ஆப்களில் சர்ஜ் பிரைசிங் முறையால் பயணிகள் கடும் அவதிப்படுவதைத் தடுக்க, மத்திய அரசு 'பாரத் டாக்ஸி' என்ற புதிய கூட்டுறவு ஆப்ஐ அறிமுகப்படுத்துகிறது. இதில் டிரைவர்கள் 100 சதவீத வருமானத்தைத் தங்களுக்கே வைத்துக்கொள்ளலாம். பயணிகள் ஒரே ஆப்இல் பதிவு செய்து, நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கட்டணத்தில் ஆட்டோ, கார் டாக்ஸி புக் செய்யலாம்.
நவம்பர் மாதம் டில்லியில் சோதனை தொடங்கி, டிசம்பரில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் 12 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் மாற்றப்படாத நிலையில், இந்த ஆப் தமிழகத்தின் முதல் தேவை என்று ஆட்டோ சங்க ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் ஹுசைன் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஓலா, உபர் போன்ற தனியார் ஆப்கள் ஆட்டோ மற்றும் கார் டாக்ஸிகளைப் புக் செய்வதற்கு பிரபலமானவை. ஆனால், தேவை அதிகமுள்ள நேரங்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது, வாகனங்கள் தூய்மையின்றி இருப்பது, ரத்து செய்யப்படுவது போன்ற புகார்கள் தொடர்கின்றன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு பக்கம் வரவே கூடாது... பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு... கோவையில் பரபரப்பு...!
இதைத் தீர்க்க, ஐ.டி. மற்றும் சுற்றுலா அமைச்சகங்கள் இணைந்து 'பாரத் டாக்ஸி' ஆப்ஐ உருவாக்கியுள்ளன. இது சஹகர் டாக்ஸி கூட்டுறவு நிறுவனத்தால் நடத்தப்படும். அமுல் தலைவர் ஜெயன் மெஹ்தா தலைமையில் இது இயங்கும். ஆரம்ப மூலதனம் 300 கோடி ரூபாய்.
இந்த ஆப், டிரைவர்களை உரிமையாளர்களாக மாற்றும். அவர்கள் சங்கிலி உறுப்பினர்களாக இருப்பதால், கமிஷன் இல்லாமல் முழு வருமானமும் அவர்களுக்கே. பயணிகளுக்கு சர்ஜ் பிரைசிங் இன்றி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம். ஆப்ஐ டவுன்லோட் செய்து, பெயர், ஈ-மெயில், போன் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவு செய்தால் போதும்.
டிஜிலாக்கர், யூமாங் போன்ற தேசிய டிஜிட்டல் தளங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். முதல் கட்டமாக நவம்பர் 2025-இல் டில்லியில் 650 வாகனங்களுடன் சோதனை தொடங்குகிறது. டிசம்பரில் 20 நகரங்களுக்கு விரிவாக்கம். 2026 மார்ச் வரை மெட்ரோ நகரங்களில், 2030-க்குள் 1 லட்சம் டிரைவர்களுடன் கிராமப்புறங்களுக்கும் பரவும்.
தமிழக ஆட்டோ சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் ஹுசைன் இதுகுறித்து கூறுகையில், "எரிபொருள் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் 12 ஆண்டுகளுக்கு மேல் மாற்றப்படவில்லை. தனியார் ஆப்களில் அடிக்கடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதனால் இத்தொழில் நடத்த முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணம் மாற்றப்படுகிறது. மத்திய அரசின் 'பாரத் டாக்ஸி' மிகவும் வரவேற்பதக்கது. டில்லியில் அறிமுகம் செய்யும்போதே, சென்னையிலும் கொண்டு வர வேண்டும். இது தமிழகத்தின் முதல் தேவை" என்றார்.
இந்த ஆப், டிரைவர்களுக்கு காப்பீடு, பயிற்சி, பெண் டிரைவர்களுக்கு 'மஹிளா சாரதி' திட்டம் போன்ற சலுகைகளையும் அளிக்கும். முதல் கட்டத்தில் 100 பெண் டிரைவர்கள் இணைந்து, 2030-க்குள் 15,000 ஆக உயரும். இது தனியார் ஆப்களின் ஒற்றுமையை உடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் ஆட்டோ டிரைவர்கள் இதை எதிர்பார்த்து வருவதால், விரைவான அறிமுகம் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: வெட்டி காவு குடுங்க அவன..! என் பிள்ளை துடிச்சு துடிச்சு செத்துடுச்சே... கதறும் உறவினர்கள்..!