×
 

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! மார்ச் 9ல் ஓட்டெடுப்பு!

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து ஓட்டெடுப்பும் லோக்சபாவில் வரும் மார்ச் 9ம் தேதி நடைபெறும் என, பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன. 

இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களின் உரையுடன் ஜனவரி 28 அன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். 

இதையும் படிங்க: சபாநாயகர் நாற்காலில் அமர மாட்டேன்!! எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்! ஓம் பிர்லா அதிரடி!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் நரவனே எழுதிய 'War Stars of Destiny' என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசினார்.

ஆனால், இந்த புத்தகம் இதுவரை வெளியிடப்படாதது என்பதால், அதன் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு லோக்சபாவில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார். இதனால் பெரும் மோதல் ஏற்பட்டது. பிப்ரவரி 13 அன்று கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்தது வரை லோக்சபாவில் அமளி நீடித்தது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இந்த தீர்மானத்தை ஆதரித்து 118க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். சபாநாயகர் பதவியை நீக்கம் செய்யும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டார். “மார்ச் 9 அன்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஓட்டெடுப்பும் நடைபெறும்” என அவர் தெரிவித்தார்.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசுக்கு லோக்சபாவில் போதுமான எண்ணிக்கை உள்ளதால், இந்த தீர்மானம் தோல்வியடைய வாய்ப்பு அதிகம். இருப்பினும், இது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 9 அன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: சபாநாயகரை திட்டியதற்கு இதுதான் சாட்சி!! ஓம் பிர்லா அறையில் வாக்குவாதம்! வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share