×
 

மோடி, அமித்ஷா முகத்தில் அறைந்த தீர்ப்பு! நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து கார்கே மகிழ்ச்சி!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரித்ததை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

புது டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பண மோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை (இடி) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க தில்லி சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 16 அன்று மறுத்தது. இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, அமலாக்கத்துறையின் விசாரணை தனிநபர் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்றும், குற்றச்செயலுக்கான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) இல்லாமல் இது சட்டப்படி ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே டெல்லி போலீசார் இவ்வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள நிலையில், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரிப்பது சரியல்ல என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், அமலாக்கத்துறை மேலும் விசாரணை நடத்தலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ப்ரியங்கா காந்தியிடம் ரகசிய டீல் பேசிய அமித்ஷா!! கறார் கண்டிஷன்! சிக்கலில் சோனியா, ராகுல்காந்தி!

இந்தத் தீர்ப்புக்கு பிறகு, தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, “இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உண்மை எப்போதும் வெல்லும். இந்த வழக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டது. இது மோடியும் அமித் ஷாவும் முகத்தில் அறை விழுந்தது போன்றது. அவர்கள் பதவி விலக வேண்டும். மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகின்றன” என்று கூறினார்.

கார்கேயுடன் இருந்த கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “பழிவாங்கும் அரசியலை நாங்கள் அம்பலப்படுத்துவோம். நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துள்ளனர். அவர்கள் தங்கள் பலத்தை காட்டுவார்கள்” என்றார்.

வழக்கின் பின்னணி:
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியது. 2010இல் தொடங்கப்பட்ட யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இயக்குநர்களாக இருந்தனர். 

பின்னர், ஏஜேஎல் நிறுவனத்தின் கடனை யங் இந்தியன் ஏற்று, அதன் 99 சதவீத பங்குகளை பெற்றது. இதில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இவ்வழக்கு பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் தனிநபர் புகாரில் தொடங்கியது.

இந்தத் தீர்ப்பு காங்கிரஸுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 100 நாள் வேலை! காந்தி பெயர் மாற்றம்?! காங்., எம்.பிக்கள் தீவிர ஆலோசனை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share