×
 

#BREAKING பீகாரில் ஆட்சி அமைக்கப் போவது யார்? - தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ...!

தபால் வாக்குகளின் எண்ணிக்கை இறுதிச் சுற்றை எட்டும்போது, ​​காலை 8:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

பீகாரில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பின் கீழ் தொடங்கியுள்ளது. தபால் வாக்குகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தபால் வாக்குகளின் எண்ணிக்கை இறுதிச் சுற்றை எட்டும்போது, ​​காலை 8:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், நவம்பர் 11ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 66.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 1951-க்குப் பிறகு மாநிலத்தில் நடந்த அதிகபட்சமாக வாக்குப்பதிவாகும். அதேபோல் பீகார் தேர்தலில் இந்த முறை அதிகபட்ச பெண்கள் வாக்களித்து வரலாற்று சாதனை படைத்தனர். இந்த தேர்தலில் 71.6 சதவீதபெண்கள் வாக்களித்த நிலையில், 62.8 சதவீத ஆண்கள் மட்டுமே வாக்களித்தனர்.

இந்த சட்டசபை தேர்தலில், 2,616 வேட்பாளர்களின் 1.4 லட்சம் வாக்குச்சாவடி முகவர்களுடன், சுமார் 8.5 லட்சம் வாக்குப்பதிவுப் பணியாளர்கள் நிர்வகித்தனர். பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஆளும் கட்சி தலைமையிலான என்.டி.ஏ மற்றும் ஆர்.ஜே.டி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. 

இதையும் படிங்க: பீகார் அரியணையில் ஏறப்போவது யார்?... ஆர்ஜேடி Vs பாஜக வேட்பாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ...!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் NDA கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே நிதீஷ் குமார் பத்தாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்பாரா? அல்லது தேஜஸ்மி யாதவ் முதல் முறையாக பீகார் அரியணை ஏறுவாரா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதே சமயம், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வாக்காளர்கள் தங்கள் ஒரு மாற்று விருப்பமாக உருவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தேர்தலில் என்.டி.ஏ- கூட்டணியே செல்லும் என்றும், ஜன் சுராஜ் கட்சி அதிகபட்சமாக 5 தொகுதிகளில் வெல்லலாம் அல்லது ஒரு தொகுதி கூட கிடைக்காமல் மண்ணைக் கவ்வக்கூடும் என கணித்துள்ளன.

இதையும் படிங்க: தட்டித் தூக்குறோம்... 501 கிலோ லட்டு ரெடி... பீகாரில் தரமான சம்பவத்திற்கு தயாராகும் பாஜக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share