அதகளப்படுத்தும் மைதிலி தாக்கூர்... NDA-க்கு ஒர்க்அவுட் ஆகுது... I.N.D.I.A-க்கு ஓரங்கட்டுதே...!
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதப் தனது சொந்த தொகுதியான ரகோபூரில் தனது முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கருத்து கணிப்புகளை எல்லாம் தவிடுபொடி ஆக்கும் வகையில், ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தேர்தல் என்றாலே அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களின் வாரிசுகள், திரைப்பட நடிகர் நடிகைகள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரே மக்களை கவரக்கூடிய வேட்பாளர்களாக கட்சிகள் களம் இறக்குவது உண்டு.
யாதவ் சகோதரர்களான தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் இருவரும் தங்கள் இடங்களில் பின்தங்கியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தேஜஸ்விக்கு ஒரு மெல்லிய முன்னிலையைக் காட்டினாலும், ஆர்ஜேடி தலைவர் தனது சொந்த இடமான ரகோபூரில் தனது முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார். அந்த வகையில் பீகார் தேர்தலிலும் பிரபலங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் அரியணை ஏறும் பாஜக... கூட்டுத் தலைமைக்கு கிடைத்த வெற்றி... பிரதமருக்கு EPS வாழ்த்து...!
யாதவ் சகோதரர்களான தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் இருவரும் தங்கள் இடங்களில் பின்தங்கியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதப் தனது சொந்த தொகுதியான ரகோபூரில் தனது முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார்.
மறுபுறம், தேஜ் பிரதாப் யாதவ், மஹுவா தொகுதியில் 3,000 வாக்குகளுக்கு மேல் பின்தங்கியுள்ளார்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர் என்பதற்காக பிரச்சாரத்தில் ஆரம்பகால கவனத்தை ஈர்த்த சிபிஐ(எம்எல்)-எல் வேட்பாளர் திவ்யா கௌதம், பீகாவின் திகா தொகுதியில் பின்தங்கியுள்ளார், அதே நேரத்தில் பாஜகவின் சஞ்சீவ் சௌராசியா வலுவான முன்னிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.தொகுதியில், பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம் என்றும் அழைக்கப்படும் ராஜேஷ் குமார், NDA வேட்பாளர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) [HAM(S)] இன் லல்லன் ராமை விட பின்தங்கியுள்ளார்.
இதில் போஜ்புரி பாடகர்கள் இருவர் எதிரதி அணியில் களமிறங்கியது பீகார் தேர்தலில் கவனம் ஈர்த்துள்ளது. பாஜக சார்பில், 25 வயதான மைதிலி தாக்கூர் அலிநகர் தொகுதியிலும், சப்ரா தொகுதியில் கேசரி லால் யாதவ் என்ற சத்ருகன் யாதவ் ஆர்ஜேடி சார்பிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் பிரபல போஜ்புரி பாடகியான மைதிலி தாக்கூர் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதலில் முன்னிலை வகித்து வருகிறார். 25 வயதான யூடியூப் பிரபலமான மைதிலி தாக்கூர் தேர்தலில் வெற்றி பெற்றால், பீகார் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெறுவார்.
மைதிலி தாக்கூருக்கு நிகராக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக சப்ரா தொகுதியில் கேசரி லால் யாதவ் என்ற சத்ருகன் யாதவ் மிகவும் பின்தங்கியுள்ளார்.
பாடகியும் முதல் முறையாக பாஜக வேட்பாளருமான மைதிலி தாக்கூர் அலிநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஆறாவது சுற்று முடிவுகளின்படி, தாக்கூர் 8,544 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளர் பினோத் மிஸ்ரா ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்து வருகிறார்.
கேசரி லால் யாதவ் என்ற சத்ருகன் யாதவ், சப்ராவில் தொடர்ந்து பின்தங்கி வருகிறார். ஆர்ஜேடி வேட்பாளரான இவர் தற்போது பாஜகவின் சோட்டி குமாரியை விட 2,380 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்
இதையும் படிங்க: நியாயமா நடந்தா காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும்... பீகார் காங். தலைவர் ஓபன் டாக்...!