காலியாகும் கூடாரம்!! பீகாரில் கரையும் காங்.,! கட்சி தாவ எம்.எல்.ஏ-க்கள் முடிவு!!
பீகாரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான். இந்நிலையில் ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.) 202 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.)-காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்தது.
61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டும் வென்று பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒற்றை இலக்க வெற்றி கூட, கட்சி தாவல் சதியில் சிக்கியுள்ளது. 6 எம்.எல்.ஏ.க்களும் ஜே.டி.யூ.வுக்கு தாவலாம் என்ற வதந்திகள் பரவியுள்ளன. காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தே.ஜ. கூட்டணி 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89, ஜே.டி.யூ. 85 இடங்களைப் பெற்றது. இண்டி கூட்டணியில் ஆர்.ஜே.டி. 25 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் மட்டுமே கிடைத்தது. ஓட்டு திருட்டு, இவிஎம் முறைகேடு என்று காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. குற்றச்சாட்டுகள் எழுப்பியும், அது தேர்தல் முடிவுகளை மாற்றவில்லை.
இதையும் படிங்க: 42 இந்தியர்களின் உயிரை குடித்த சவுதி விபத்து! ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்!!
இந்தத் தோல்வு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி மேலிடம், “இந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தாவினால் காங்கிரஸ் பீகாரில் ஒண்ணுமே இல்லாமல் போய்விடும்” என்று கவலையடைகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின், வெற்றி பெற்ற 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள், “இனி காங்கிரஸில் இருந்தால் எதிர்காலம் இருக்குமா?” என்ற சந்தேகத்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சிலர் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.)வுக்கு இணையலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜே.டி.யூ. முக்கிய தலைவருடன் தொடர்பில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.
இதற்கிடையே, ஆளும் ஜே.டி.யூ. காங்கிரஸை முற்றிலும் “துடைத்தெறிய” வேண்டும் என்ற நிலையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பரபரப்பு. நிதிஷ் குமாரின் ஜே.டி.யூ., காங்கிரஸ் பலவீனத்தைப் பயன்படுத்தி, அவர்களை இணைக்க முயல்கிறது. இதனால், பீகாரில் காங்கிரஸ் இன்னும் பலவீனமடையலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
காங்கிரஸ் மேலிடம், 6 எம்.எல்.ஏ.க்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களைத் தக்க வைக்க கட்சி தலைவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர். ஆனால், எம்.எல்.ஏ.க்கள் யாரும் இதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால், “எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என்ற சஸ்பென்ஸ் பீகாரில் நீடித்து வருகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர்கள், இந்தச் சூழலை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இந்தச் சம்பவம், பீகார் அரசியலில் புதிய சூழ்ச்சிகளைத் தோற்றுவிக்கலாம். காங்கிரஸ், 2026-ல் நடக்க உள்ள மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் தேர்தல்களுக்கு முன், பீகாரில் இந்தப் பலவீனத்தை சரிசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜே.டி.யூ.-காங்கிரஸ் இடையிலான இந்தப் பதற்றம், இண்டி கூட்டணியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டே நிமிஷம் தான்..!! எல்லா டிக்கெட்டும் காலி..!! பயணிகள் ஏமாற்றம்..!!