×
 

கொண்டாட்டத்தை விட பாதுகாப்பே முக்கியம்..! அசாம் மக்களுக்கு மாநில முதல்வர் சொன்ன அறிவுரை..!

பிஹூ கலாச்சார பண்டிகை கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களை இந்தியா தடுத்து வரும் நிலையில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. பதட்டமான சூழல் இருப்பதால் பண்டிகை கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் பிஹூவை உற்சாகமாக கொண்டாடி வந்ததாகவும், அனைவரின் பங்களிப்பும் நன்றியும் கூறியுள்ளார். ஆனால் இந்த பண்டிகை கொண்டாட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாகவும், மே 10ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம் இது..! இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

இந்த துடிப்பான கொண்டாட்டத்தை நம் அனைவரும் ஒற்றுமையுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஹிமந்தா பிஸ்வா, பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதனை மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share