×
 

#BREAKING: அடித்து ஆடும் பாஜக... பெரும்பான்மையை தாண்டி அசத்தல்... 161 தொகுதிகளில் முன்னிலை...!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை வகுத்து வருகிறது.

பீகாரின் அரசியல் களம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியுள்ளதுm ஏனெனில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) என்று அழைக்கப்படும் பாஜக தலைமையிலான கூட்டணி, முன்னிலை வகித்து வருகிறது. 

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. 

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீஹார் முதலமைச்சராக இருந்தார். இவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்தார். இதனிடையே, பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்...!! ஸ்டாலினை காபி அடித்த பாஜக... பீகாரில் அதிரடி அறிவிப்பு..!

இந்த நிலையில் இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரும் நிலையில் பாஜக கூட்டணி 161 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களிலும் ஜன் சுராஜ் கட்சி மூன்று தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மை பெற 122 இடங்கள் போதுமானதாக இருக்கும் நிலையில் பாஜக கூட்டணி 161 இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகிறது. இதனால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.2,500; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை... வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேஜஸ்வி யாதவ்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share