என்ன ஆச்சு அண்ணாமலைக்கு? இதுக்கு கூட வரலையாம்... BJP தலைகள் குழப்பம்..!
தமிழக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வருகை தராதது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில் பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் பாஜகவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மையக்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல் முருகன், வானதி சீனிவாசன், எச் ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே அண்ணாமலை பேசுவதற்கு 12 மணி முதல் 1:30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும் இதுவரை அண்ணாமலை வருகை தரவில்லை எனக் கூறப்படுகிறது. ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டும் வந்து அண்ணாமலை பேசி விட்டு செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை அண்ணாமலை கலந்து கொள்ளாமல் இருப்பது அவரது அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சந்தோஷம்.. அந்த மாதிரி ஆளுங்க தமிழ்நாட்டுல இல்ல! பிச்சு உதறிய கனிமொழி..!
கே. அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அவரது தலைமையில், பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்று தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு முக்கியத்துவம் அளித்தது. அவரது ஆக்ரோஷமான அரசியல் பாணி, திமுக அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள், மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சிகள் ஆகியவை பாஜகவின் புலப்படுத்தலை அதிகரித்தன.
தலைமை மீது அண்ணாமலைக்கு அதிருப்தி எனக் கூறப்படும் நிலையில், தனக்கு எந்தவிதமான அதிருப்தியும் கிடையாது எனவும் பணிச்சுமை தான் காரணம் என்றும் அண்ணாமலை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் ஹிந்தியை தூக்கிப் பிடிக்கும் அமித் ஷா... அடுத்தடுத்த ஷாக்