×
 

பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு!! நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு! தொண்டர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வரும் இந்த சூழலில், பாஜக தனது பிரசாரத்தை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடந்த 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பிரசாரம் செய்தது பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் 2 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன. 

முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகளுக்கு பொறுப்பு ஏற்கிறார்.

இதையும் படிங்க: 4 வருஷம் ஆச்சு?! திமுக எனக்கே ரூ.48,000 கொடுக்கணும்!! லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிளியூர் தொகுதிகளுக்கும், எச்.ராஜா முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பதூர், சிவகங்கை, உடுமலைப்பேட்டை தொகுதிகளுக்கும், வானசி சீனிவாசன் திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு தொகுதிகளுக்கும், பொன்.ராதாகிருஷ்ணன் தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி தொகுதிகளுக்கும், வி.பி.துரைசாமி எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூர் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பொறுப்பாளரும் குறைந்தது இரண்டு முறை முழு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். ஒரு சுற்றுப்பயணத்தில் 24 மணி நேரம் செலவிட வேண்டும், இரவு தங்கி வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சமுதாய தலைவர்கள், மாவட்ட-மண்டல் நிர்வாகிகள், பிரிவு நிர்வாகிகளுடன் சந்திப்பு, சக்தி கேந்திரங்கள், பூத் அளவில் நேரடி ஆலோசனை, கார்யகர்த்தாக்களுடன் தனிப்பட்ட பேச்சு, தொகுதி வெற்றிக்கான திட்டமிடல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுதல் போன்றவை அடங்கும். தொடர் சுற்றுப்பயணங்களில் தேவைக்கேற்ப திட்டமிடலாம் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் பாஜக தமிழகத்தில் தனது செல்வாக்கை விரிவாக்குவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. அண்ணாமலை போன்ற பிரபல தலைவர்களின் சுற்றுப்பயணம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வலுவான சவாலாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: மோடி பொங்கல் விழா! திருச்சியில் அமித்ஷா பங்கேற்பு!! பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share