×
 

‘முதலில் ராஜ துரோகி, இப்போது ராம துரோகி’..! ராகுல் காந்தி மீது பாஜக பாய்ச்சல்..!

‘முதலில் ராஜ துரோகி, இப்போது ராம துரோகி' என ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளது பாஜக.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலை கேள்வி எழுப்பி ராஜ துரோகம் செய்த ராகுல் காந்தி, இப்போது, கடவுள் ராமர், ராமாயனத்தை புராணக்கதைகள் எனக் கூறி ராம துரோகம் செய்கிறார் என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூணாவல்லா டெல்லியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி முதலில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ராணுவத்தின் துல்லியத் தாக்குதலை கேள்வி எழுப்பி, ராஜதுரோகம் செய்தது. இப்போது, அந்தக் கட்சியின் எம்.பி. கடவுள் ராமர், ராமாயணத்தையும் புராணக் கதைகள் எனக் கூறி ராமருக்கு துரோகம் செய்கிறார், இந்துக்களையும் தொடர்ந்து காயப்படுத்துகிறார். வாக்குவங்கிக்காக தொடர்ந்து இந்துக்களை காயப்படுத்துகிறார் ராகுல் காந்தி.

இதையும் படிங்க: 50 கி.மீ சுற்றளவில் தொடரும் கொலைகள்.. ஒரே பாணியில் நடப்பது எப்படி? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி..!

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, கடவுள் ராமர் என்பவர் நிஜத்தில் இல்லை, இது புராணக்கதை கற்பனைத் தோற்றம், ஆதலால் ராமர பாலத்தை இடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. காங்கிரஸ் கட்சி இதுபோன்று பேசுவது முதல்முறை அல்ல. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள். கடவுள் ராமரை கற்பனைத் தோற்றம் என்று கூறுகிறார்கள்.

ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருக்கும் சரண்ஜித் சிங் சாணி துல்லியத் தாக்குல் குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ராணுவம் தகவல் தெரிவித்த பின்புகூட, தேசமே ராணுவத்துக்கு ஆதரவாக நின்றபோதிலும்கூட, தீவிரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோதும்கூட காங்கிரஸ் ஆதவாக இல்லை. பாலகோட் துல்லியத் தாக்குதல் நடந்தபோதும்கூட காங்கிரஸ் கட்சி ராணுவத்தை கிண்டல் செய்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் என்பது பெயரை மாற்றி, தேசத்துக்கு எதிராக காங்கிரஸ் என்று பெயரை வைக்கலாம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி  பேசுகிறது. ஆனால், வெளியே நடக்கும் கூட்டத்தில் ராணுவத்தினரை விமர்சிக்கிறார்கள். ராகுல் காந்தியின் கட்டளைகளால், தேசத்தைவிட வாக்குவங்கியை பெரிதாகப் பார்க்கிறார்கள், பஹல்காம் தீவிரவாத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தியின் உத்தரவுகளால் ராணுவத்தின் தார்மீகம் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இவ்வாறு ஷெசாத் பூணாவல்லா தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: பாக்.-க்கு ஆதரவா பேசலாமா? அவங்கள கண்காணிக்கணும்! 3 பேரை கடுமையாக சாடும் எச்.ராஜா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share