×
 

#Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

48 மணி நேரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை கோவை வடக்கு தொகுதி பரப்புரைகள் தற்காலிகமாக ரத்து.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், இன்று (வெள்ளிக்கிழமை) திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, வானதி சீனிவாசன் கடந்த சில நாட்களாகத் தனது தொகுதியில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அதிதீவிரப் பிரசாரம்: இன்று பரப்புரையின் போது அவரது காலில் கடுமையான வீக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் (KMCH) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வானதி சீனிவாசனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அடுத்த 48 மணி நேரத்திற்கு (2 நாட்கள்) அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சிகிச்சைக்குப் பின் அவர் இன்றே வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: திமுக என்றால் டிபார்ட்மெண்டல் கட்சி! ஸ்டாலினின் தேர்தல் அறிக்கையை விளாசிய வானதி சீனிவாசன்!

மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கோவை வடக்கு தொகுதியில் இன்று மற்றும் நாளை நடைபெறவிருந்த அவரது அனைத்துத் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பாஜக தொண்டர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA), கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசன் மீண்டும் களம் காண்பதால், அங்குப் போட்டி மிகக் கடுமையாக உள்ளது. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வானதி சீனிவாசன் விரைவில் குணமடைந்து மீண்டும் தேர்தல் களத்திற்குத் திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share