ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு!
நாட்டின் இளைஞர்களை கண்டு பாஜக அஞ்சுகிறது ஜந்தர் மந்தரின் 2வது சீசன் விரைவில் தொடங்கும் என அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எழுச்சியைக் கண்டு ஆளும் பாஜக அரசு மிகவும் அஞ்சி நடுங்குவதாகக் குடிமக்கள் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பின் (CJP) முக்கியப் பொறுப்பாளர் அபிஜித் தீப்கே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அரங்கம் (மண்டபம்) ஒன்றை வாடகைக்கு எடுக்க முற்பட்டபோது, தங்களுக்கு நேர்ந்த கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்துவதற்காக மண்டபம் ஒன்றை முன்பதிவு செய்ய முயன்றபோது, பல உரிமையாளர்கள் பயத்தின் காரணமாக இடத்தைத் தர முன்வரவில்லை. மேலிடத்திலிருந்து தங்களுக்குக் கடுமையான அழுத்தம் இருப்பதாக மண்டப உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆரம்பமே ஷாக்... சி.எம்.விஜய்க்கு முதல் எதிர்ப்பு... சட்டப்பேரவையை அதிர விட்ட பாஜக....!
பல சிரமங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகே கூட்டத்திற்கான ஒரு மண்டபம் கிடைத்தது. இருப்பினும், நிகழ்ச்சி நடைபெறும் நாளான இன்றுகூட மண்டப உரிமையாளர்களுக்குப் பல்வேறு அமைப்புகள் மற்றும் அதிகார மையங்கள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இளைஞர்களின் குரலை நசுக்கப் பார்க்கும் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், தங்களது போராட்டத்தின் அடுத்தகட்டமாக "ஜந்தர் மந்தர் சீசன் 2" மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!