சரித்திரமே இல்லை... மண்ணை அள்ளி தூற்றாத குறையாக அண்ணாமலைக்கு சாபம் விட்ட ஹெச்.ராஜா...!
பாஜக வில் இருந்து வெளியேறியவர்கள் பிரகாசித்ததாக சரித்திரம் இல்லை என எச்.ராஜா கடும் விமர்சனம்
காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், மூன்று வயது குழந்தை பாலியல் பலாத்காரம் முதல்வர் ராஜினா செய்திருக்க வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், 4,000 நாட்களைக் கடந்திருக்கிறார்கள். இந்த நாட்டினுடைய பிரதமராக இருந்து, இந்த நாட்டில் அதிக நாள் பிரதமராக இருந்த, முதல் இந்திய பிரதமரான திரு. ஜவஹர்லால் நேரு அவர்களின் ரெக்கார்டை விஞ்சுகின்ற அளவிற்கு, தொடர்ந்து இந்த நாட்டின் பிரதமராக இருந்து பணியாற்றி வருகிறார்கள். ஆகவே, உங்கள் மூலமாக இந்த நாட்டின் பிரதமருக்கு, தமிழக மக்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே மாதிரி நீங்க பார்த்தீர்களேயானால், நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கான வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக, மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாகப் பார்க்கப்போனால் பெண்கள், பெண்களுடைய வாழ்வாதாரம் முன்னேற, நான் சமீபத்திய உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். பிரதான் மந்திரி வங்கிக் கணக்கில் இருந்து சொல்ல முடியும். ஆனால், இப்போ சமீபத்தில் உஜ்வலா திட்டம், ஜல் ஜீவன் திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்கள் ஆகியவற்றின் மூலமாக இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் முன்னேறுவதற்கான பல்வேறு திட்டங்களை மாண்புமிகு பிரதமர் அவர்கள் கொண்டு வந்து செயல்படுத்தியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: யாரை ஏமாத்துறீங்க..? GREEN MAGIC பால் தட்டுப்பாடு..! அண்ணாமலை தாக்கு.!
கடந்த 11-12 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி, விவசாயிகளின் கௌரவ நிதி திட்டத்தின் மூலமாக 4.27 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி இதுவரை, ஏழை எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, ஒவ்வொரு விவசாயிக்கும் 6,000 ரூபாய், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் இதுவரைக்கும் இப்படி நடந்தது இல்லை. இது உலக நாடுகள், உலக நிதி அமைப்புகள், IMF போன்ற நிதி நிறுவனங்கள் ஆகியவை ஒப்புக்கொண்டிருக்கின்ற விஷயம். இந்த நாட்டில் 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
4 கோடிக்கும் அதிகமான ஏழை எளிய மக்கள் பிரதான் மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் மூலமாகப் பயன்பெற்றிருக்கிறார்கள். அதேபோல, 10 கோடிக்கும் மேல் எல்.பி.ஜி சிலிண்டர் பெண்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடுமட்டுமல்லாமல், 2021-லிருந்து பெண்களுக்கான நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, உலக அளவில் ஜி20 நாடுகளுக்கு பாரத நாடு தலைமையேற்று மிகச் சிறப்பாக உலகத்தை வழிநடத்தியிருக்கிறது.
அதேபோல, இந்திய அரசியலில் ஒரு மாநிலத்துக்கும் இன்னொரு மாநிலத்துக்கும் இருக்கின்ற வேறுபாடு, என்னவென்றால் இந்த வேறுபாடு இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370, 35A ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பிரதமர் அவர்கள் தனி கவனம் செலுத்தி வந்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்திற்கு 14 லட்சம் கோடி ரூபாய் இந்த 12 ஆண்டுகளில் அரசாங்கமானது நிதி பெற்றிருக்கிறது. அதேமாதிரியாக 2026-ல் மட்டும் தமிழகத்திற்கு ரயில்வேயில் 7,611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, பிரதம மந்திரியினுடைய மத்திய பிஜேபி லெட், NDA கவர்மெண்ட் அதன் மூலமாகப் பல்வேறு திட்டங்கள் பிரதமர் மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகவே, நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஏதோ லிப் சர்வீஸ், உதட்டளவில் நாங்கள் மாநிலத்திற்கு இதைச் செய்தோம் அதைச் செய்தோம் என்று பேசாமல், மாநிலத்திற்கும் மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தேசிய அளவில், சர்வதேச அளவில், மாநில அளவில் திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி இதுவரை 14 லட்சம் கோடி தமிழகத்திற்கு மட்டும் மத்திய அரசு இதுவரை செயல்படுத்தியிருக்கின்ற திட்டங்கள். நாங்கள் உத்தேசித்திருக்கிறோம், இதைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் அப்படிச் சொல்லவில்லை, இவை அனைத்துமே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள். அதனாலே மாண்புமிகு பிரதமரின் நல்லாட்சி தொடருவது என்பது தேசிய அளவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, மாநில அளவிலும் தமிழகத்திற்குப் பல்வேறு நன்மைகளை அளித்திருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்க யாராவது ஏதாவது கேட்க வேண்டும் என்றால் கேட்கலாம்.
அண்ணாமலை அவர்கள்... இப்ப பிஜேபியில் இருக்கிறாரா? இல்லை. அப்புறம் அவரைப் பற்றி எதுக்கு நாம பேச வேண்டும்?. 17 லட்சம் பேர் ஒரே நாளில் இணைந்திருக்கிறார்கள் என்கிற மாதிரி...அது டிஸ்பியூட்டபிலான விஷயம் இல்லையா? அதைப் பற்றி அது எவ்வளவு தூரம் பொய் என்பதைப் பற்றிச் சமூக வலைத்தளங்களில் பல தரவுகள் வந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனாலே அதிலெல்லாம் உள்ள போவதற்கு நான் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை சித்தாந்த ரீதியிலான அமைப்பு. மெம்பர்ஷிப் அண்ட் மெம்பர்ஷிப் தனி நபர்கள் வருவார்கள், தனி நபர்கள் அவர்களைச் சுற்றிப் போவார்கள். எந்தச் சித்தாந்தத்திற்காக அவர் வெளியில் போயிருக்கிறார்? பாரதிய ஜனதா கட்சி ஒரு சித்தாந்தத்திற்கான கட்சி.
உங்களுக்கு ஞாபகத்திற்குச் சொல்கிறேன், பிஜேபியில் ஆதிகாலத்திலிருந்த டாக்டர் பல்தேவ் சிங், ஜனசங்கத்திற்கு முன்னாடி பல்தேவ் சிங். நீங்க இடைப்பட்ட காலத்தில், இந்த 'வகேலாவா மாறிட்டான்டா அவன்' அப்படிங்கிற ஒரு பிரேஸ் பார்த்திருக்கோமா? சங்கர்சிங் வகேலா. கட்சிக்குத் துரோகம் பண்ணி யாராவது வெளியில் போனால், அவருக்கு என்ன பேர் சொல்றோம்? சங்கர்சிங் வகேலா. இதற்கு அப்புறம் பல துரோகிகள் வந்திருக்கலாம் போயிருக்கலாம். ஆனால், வகேலா அப்படிங்கிறது நமக்கு ஒரு முத்திரை குத்தப்பட்ட பெயராக இருக்கிறது.
அந்த மாதிரி, திரு. கல்யாண் சிங் அவர்கள் கூட கட்சிக்குச் செஞ்சவர் தான் சித்தாந்தத்திற்கு. ஆனால், அவர் வெளியில் போனாலும் திரும்பவும் வந்தார். யாராவது இதுவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பெரிய மனுஷன் ஆனவர்கள் உண்டு. ஆனால், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியில் போய் பிரகாசித்தவர்கள் என்று ஒருவர்கூடக் கிடையாது. அதனால், நீங்கள் கேட்ட நபர் பிஜேபியில் இல்லை. அதனால், அவரைப் பற்றிப் பேசி அனாவசியமாக நம்ம நேரத்தை வீணடிக்காமல் இருக்கிறது...
தமிழ்நாட்டின் தலைவராக இருந்திருக்கிறார் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டுத் தலைவராக கிருபானி கூட இருந்தார். சரி பிஜேபியில் இப்போ டாக்டர் சந்திரபோஸ் 93-லிருந்து 95 வரை தலைவராக இருந்தார் ஒரு டேர்ம். அந்த மாதிரி டாக்டர் கிருபானியும் ஒரு டேர்ம் இருந்தார். அந்த மாதிரி ஒரு டேர்ம் இருந்தவர்கள் உண்டு. அதிகபட்சம் ரெண்டு டேர்ம் தான் இருக்க முடியும். அதனாலே, நாம ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் பேசிப் பொழுதை ஓட்டுவதற்கு இல்லை.
அண்ணாமலை அவர்கள் வெளியேறியதால் தமிழக பாஜகவிற்குப் பின்னடைவா?
அப்படி எல்லாம் இல்லை. இப்ப காலையிலே ஈரோட்டில் இருந்து வந்த முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் எல்லாம் இப்போ உங்களை அனுப்பிச்சுக் கொடுத்திருக்காங்க, உங்களையெல்லாம் சந்திக்கிறதுக்கு. அவர்கள் கூடக் கட்சியை விட்டுப் போயிட்டாங்கன்னு எல்லாம் வதந்தி பேசப்பட்டது. அவங்க என்ன சொல்றாங்க, "ஐயா, தயவு பண்ணி இந்த வதந்திகளை நம்பாதீங்க." நீங்க நேற்றிரவு, நேற்றைய பகலில் பல பேர் பற்றியும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவங்க நேரா வர்றாங்க, "ஐயா நாங்க பிஜேபியில் இருக்கோம், எங்களுக்குச் சித்தாந்தம் பெருசு." அதனாலே, யார் போயிருக்காங்க என்பதெல்லாம் உறுதியான விஷயம் இல்லை. ஒரு தவறான கற்பனை மக்களுக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது, நீ அதிலும் இருக்கலாம் இதிலும் இருக்கலாம், அப்படின்னு பேசி அவர்கள் புதிய அமைப்பிற்கு பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் அழைக்கப்படுகிறார்கள்
அப்படின்னு சொல்றாங்க. அதை வரவேற்றவர்கள், ஈரோட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாம் எங்க பேரைத் தவறாகப் பிரஸ்ஸிற்கு கொடுத்திருக்காங்க, நாங்க நேரா உங்களை வந்து பார்த்து நாங்க பிஜேபியில் தான் இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காக வந்திருக்கிறோம்.
அதனாலே, ஒரு நிலையற்ற, நிச்சயமாக இந்நாள் வரை எங்களோடு தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு உள்ளவர்கள் கட்சியை விட்டுப் போயிட்டதாக அவர்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதனாலே, ஒரு சில நாளில் தட் வில் கிரிஸ்டலைஸ். இன்னார் இருக்காங்க, இன்னார் இல்லை என்று. அதனாலே, நாம கட்சியிலே இல்லாதவரைப் பற்றி பேச வேண்டாம்.
இதையும் படிங்க: தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!