×
 

வெளங்காதவங்க எல்லாம் அமைச்சராகிட்டாங்க... தவெகவை பார்த்து வயிறெரியும் எச்.ராஜா...!

ஒன்றும் விளங்காதவர்கள் தான் தமிழகத்தில் அமைச்சர்களாக உள்ளனர். மார்டின் குடும்பத்தின் பிடியில் உள்ளதாகவும் எச். ராஜா கடும் விமர்சனம்

காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தவெக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: புதுசா பலரும் ஆட்சிக்குப் பொறுப்புக்கு ஒருத்தர் வந்திருக்கார். அவருக்குப் பெரும்பான்மை இல்லாமல், சில்லுவண்டிகளை ஓட்டி ஒரு பெரும்பான்மையை ஒப்பேற்றி இருக்கிறார் அப்படின்னு. சரி, இந்த 30 நாட்கள், 35 நாட்களில் விஜயோட ஆட்சி எப்படி இருக்கு? நேற்றைக்கு மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது காரைக்குடியில். இந்த 30 நாளில் 40 பேருக்கு மேல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன், பரந்தூருக்குப் பறந்து போனவர், பரந்தூர் தானே? இங்க எங்கேயாவது போனாரா? சொல்லுங்க. அவர்தான் பொறுப்புள்ள சீஃப் மினிஸ்டரா என்ன? எவ்வளவு மோசமான ஒரு தீய சக்தி இன்னைக்கு சீஃப் மினிஸ்டராக இருக்கு. யோசித்துப் பாருங்க, ஏன் போகலை? சரி, நேற்றைக்குக் கொல்லப்பட்ட குழந்தையை எந்த மந்திரி போய் பார்த்தாங்க? யாரும் போனா அந்த மூஞ்சி கூடத் தெரியாது நமக்கு. அரசியலில் ஒழுக்கமில்லாதவர்கள்.
ஆகவே, கடந்த 40 நாளில் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு பொறுப்பற்ற, தான்தோன்றித்தனமான, மக்கள் மீது அக்கறையற்ற ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது.

 தவெகவிற்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்ற கேள்விக்கு, இங்க பாருங்க, மக்கள் ஆதரவு அதிகம் என்றால் 125, 133 இதெல்லாம் பெற்றார்களா இல்லையா? அரசாங்கங்கள் இருந்ததா இல்லையா? ஆமாம். ஏன்னா, நான் உங்களுக்குச் சொல்கிறேன். மக்கள் ஆதரவு முழுமையாக இல்லாத ஒரு குக்கட் அப் கவர்மெண்ட் இருக்கு, அதை ஒத்துக்கொள்கிறீர்களா? மக்கள் ஆதரவு முழுமையாக இருக்கிற சர்க்கார் இருக்கா? அது அமைந்திருக்கா? சர்க்காரை அமைக்க மூணு தரம் போயிட்டு வர வேண்டியிருந்தது ஆளுநரைப் பார்க்க. ஆளுநர் வாஸ் நாட் சாட்டிஸ்பைட். நீங்கள் என்னைத் திருப்திப்படுத்துகிற அளவிற்கு எண்களின் பேரை எழுதிக்கொண்டு வாருங்கள் அப்படின்னு மூணு தரம் அனுப்ப வேண்டியிருந்தது. அந்த மாதிரித் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஆட்சி. அதோடு இல்லை, இப்போ நேற்றைக்கு, இரண்டு நாள் முன்னாடி இரண்டு பெண்கள், நீங்க பார்த்தீங்கன்னா வரிசையாகப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பிச்சு வீசப்பட்டிருக்குக் குழந்தைகள். ஒரு முதலமைச்சர் நானாக இருந்தால், ராஜினாமா பண்ணியிருப்பேன். வெட்கங்கெட்ட போஸ்ட் எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். சொல்லியிருக்காரா?

 ஆமாம். அதனாலே, நீங்க வந்து தமிழகத்திற்கு ஒரு துரதிர்ஷ்டம் இப்படி ஒரு சர்க்கார் அமைந்திருக்கிறது. இரண்டாவது, பிஜேபியை விட்டு யார் போயும் பிஜேபிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டது இல்லை. உங்களுக்குப் புரியறதுக்குச் சொல்கிறேன். நாம கற்பனையில் ஊடகங்களும் மிதக்குது. ஏன்னா, 2014-ல் இதே மாதிரி சூழ்நிலை. அதிமுக இல்லை நம்மகிட்ட, திமுக இல்லை. 2014-ல் அண்ணாமலை பிஜேபியில் இருந்தாரா? எங்கிருந்தார் என்றே தெரியாது. போலீஸில் தன்னோட கர்நாடகாவில் உத்தியோகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரி, பிஜேபி வாங்கின, பிஜேபி கூட்டணி வாங்கின ஓட்டுகள் எவ்வளவு? 19 சதவீத வாக்குகள்.
தயவு பண்ணி ஊடகத்தினர் தரவுகளை மீறிப் பொய் பரப்ப நீங்கள் உதவக்கூடாது.

இதையும் படிங்க: மதநம்பிக்கையில் விளையாட்டா.? மேனாமினுக்கு வேலை வேணாம்... H.ராஜா காட்டம்..!!

அப்போ அண்ணாமலை வாஸ் நாட் இன் பாலிடிக்ஸ். நான் இதை டிஸ்கஸ்ஸே பண்ண விரும்பலை, நீங்க ஆரம்பிச்சதுனால நான் சொல்ல வேண்டிய நிர்பந்தம். அவர் அரசியலில் இல்லை. திமுக இல்லை என்டிஏ-வில், ஏடிஎம்கே இல்லை. ஆனால், 19 சதவீதம் ஓட்டு. சரி, 24-ல் அண்ணாமலை இருந்தார், தலைமையில் இருந்தார், 24 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்தட்ட இதே தான் வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கின்ற அங்கமதிக்கின்ற கட்சிகள் வாங்கின ஓட்டு 18 பர்ஸென்ட். அண்ணாமலை இருந்து வாங்கின ஓட்டு 18, 14-ல் அண்ணாமலை என்கிற நபர் அரசியலிலேயே இல்லாதப்ப வாங்கின ஓட்டு 18 பர்ஸென்ட். யாராவது இந்த எச்.ராஜா பேசுற புள்ளிவிவரம் பொய்ன்னு சொல்லட்டும். 19, இப்போ 24-ல் 18. 22 சீட்டு நின்னு வாங்குற ஓட்டும் அதுவும் சமமாகுமா? என்ன பேச்சு? நாம வந்து, நான் புள்ளிவிவரங்கள் பேச ஆரம்பித்தால் அது வந்து பலருடைய போலி முகங்கள் கிழிந்து போகும்.

மக்களைப் பொறுத்தவரைக்கும் ரீல்ஸ் மோகத்தில் அடிமையாக இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு,  அந்த ரீல்ஸ் தேர்தலில் ரிஃப்ளெக்ட் ஆகலைங்கிறதை 24-ல் பார்த்தோமா பார்க்கலையா?. இங்க பாருங்க, 24-ல் அந்த ஃபிகர் தான் நாம் அண்ணாமலை இருக்கிறதை வச்சுப் பேசுறோம். அப்போ 24-ல் நாம் பார்த்தது 14-ல் வாங்கினதை விட ஒரு சதவீதம் கம்மி. 14-ல் அண்ணாமலை தலைவர் இல்லை, 24-ல் அண்ணாமலை தலைவர். சொல்றது புரியுதா, அதைத்தானே இங்க விவாதிக்க முடியும், நீங்க வந்து நம்புறது ரீல்ஸ். 'ரீல் விடுறான்டா அவன்' சொல்றோமா, அந்த மாதிரி விடுற ரீலை இங்க விடக்கூடாதுல..

 பாருங்க நான் சொல்றேன், இப்போ வந்து தமிழக இதுல மாறனும்னா ஒன்னு நம்மகிட்ட இருக்கவர் வெளியில் போகணும். ரீல்ஸ் மக்கள் மனநிலையை ரிஃப்ளெக்ட் பண்ணலைங்கிறேன். நான் அதான் சொல்றேன், அப்போ வந்து ரீலைச் சுத்தி விஜய் வந்தார் என்று இருக்கா?. 

ரீல்ங்கிறது பொய்தான் சார், ரீல்ஸ்னாலே பொய்தான், ஆனால் அந்தப் பொய் இன்னைக்கு உண்மையாயி அங்க ஆட்சி அமைச்சிருக்கு  பொய் உண்மையாயிடுச்சுன்னு சொன்னீங்கன்னா நீங்க விஜய் ரீலைச் சுத்தி ஜெயிச்சிருக்கார்னு அர்த்தம். நோ நோ, நீங்க பேசிண்டிருக்கிறது எச்.ராஜா கிட்ட என்றார். 


 மேகதாதுவிற்கு மத்திய சர்க்கார் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம்னு திரு. ஷெகாவத் அவர்கள் ஜல்சக்தி அமைச்சராக இருக்கிறப்ப, தஞ்சாவூரில் அன்னைக்கு துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, மைனாரிட்டி அணி தலைவர் ராஜா எல்லாரும் உட்கார்ந்திருக்கோம். அன்னைக்குத் திரு. ஷெகாவத் அவர்கள் தெளிவாக அறிவித்தார், நாங்கள் மேகதாதுவிற்கு மத்திய அரசாங்கம் அனுமதி கொடுக்காது. இப்பவும் அதே பொசிஷன் தான், மத்திய ஜல்சக்தி மினிஸ்டர் யாராவது நாங்கள் அனுமதி கொடுக்கப் போகிறோம் என்று சொன்னார்களா? இல்லை. அதனாலே அவங்க கற்பனையா வாழ்றதை நாம ஏன் தடுக்கணும்? அதுவும் டி.கே. சிவகுமாரைப் பற்றி எல்லாருக்கும் தெரியும், காங்கிரஸில் சித்தராமையாவிற்கு ஓராத நேர். 


 திருப்புரங்குன்றத்தில் பழைய நடைமுறையே தொடரும்னு டிஜிபி சொல்லியிருக்கார் சார்...
 நீதிமன்றத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கா? நீதிமன்றம் நாளைக்கு நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்னு சொன்னா, நிர்மல்குமார் அதெல்லாம் முடியாது நான் நீதிமன்றம் சொல்றதைக் கேட்க மாட்டேன்னு சொல்லுவேன்னு நாளைக்குச் சொல்லச் சொல்லுங்க. நீதிமன்றத் தீர்ப்பு, பழைய நிலைன்னு நீதிமன்றம் சொல்லலைங்க. மந்திரி சொல்றாரு, நீங்க மந்திரியை நேற்றைக்கு இருந்த ராஜ்மோகனா? பள்ளிக் கல்வித்துறை? அவர்தானே, ராஜ்மோகன் தானே? ஆமாம், அவர் என்ன சொன்னார், பொட்டு வச்சிட்டு வரக்கூடாது, பூ வச்சிண்டு வரக்கூடாது, எல்லாரும் மொட்டந்தலையா, நாயை விட்டு நக்க விட்டு அப்படித்தான் வரணும் அப்படிலாம் சொன்னாரா? நேற்றைக்கு என்ன சொன்னார்? நானே பூ வச்சுக்கிட்டு தான் வரணும். (சிரிப்பு)
நீங்க இன்னைக்கு மந்திரியா இருக்கிறவங்க வந்து அறிவார்ந்தவர்கள் ஒருத்தர் கூடக் கிடையாது. என்ன ஒன்னே ஒன்னு என்ன சொல்லலாம், இந்த பணம் டீல் பண்ணிண்டிருக்கிற மார்ட்டின் குடும்பத்தால் இந்த அரசாங்கம் ஆட்டி வைக்கப்படுகிறது.

அப்போ இந்த அரசாங்கம் அஞ்சு வருஷம் ஃபுல்ஃபில்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா? என்ற கேள்விக்கு, இங்க பாருங்க, இருக்கும்னு நான் சொல்லலை.  இருக்கும் இருக்காதுன்னு சொல்றதுக்கு நான் என்ன ஜோசியக்காரனா?. நான் என்ன சொல்றேன், இந்த அரசாங்கம் பேசினது நேற்று பேசினது ராஜ்மோகன் இன்னைக்கு மாற்றிப் பேசிருக்கார். நான் கேட்கிறேன், நீங்க அந்த ராஜ்மோகன் இஸ்யூவே எடுத்துக்குங்க. பர்தா போடாமல்லாம் வரணும்னு சொல்றதுக்கு முதுகெலும்பு யாருக்காவது இருக்கா இந்த அமைச்சரவையில்?

அப்படி இல்லை, ஏன் பேசினாய்? அப்போ அறிவுகெட்டு பேசினாயா? அது இருக்குல்ல, ஏன் பேசினாய்? ராஜ்மோகன் யாரும் பொட்டு வச்சிண்டு வரக்கூடாது, பூ வச்சிண்டு வரக்கூடாதுன்னு ஏன் பேசினார் அவர்? நான் அதை இது கேட்கிறேன், சிலுவை போட்டுண்டு வரக்கூடாதுன்னு ராஜ்மோகனுக்குச் சொல்வதற்குத் தைரியம் இருக்கா? சொல்லுங்க ஜோசப் விஜய் என்ன பண்றார்? நீங்க ஒன்னும் இல்லை, எல்லாரும் பத்து வருஷமா இருக்கீங்க. ஜோசப் விஜய்ங்கிறது அவர் பேருங்கிறதை முதல் பகிரங்கப்படுத்தினது யாரு? நான்தான் சார். அப்போ என்னை நீங்க அத்தனை பேரும் சேர்ந்து வசைபாடினீர்களா இல்லையா? அதனாலே சொல்கிறேன் நான். அனாவசியமாகக் கற்பனையில் வாழாதீங்க. முதல்ல ஊடகம் திருந்தனும்ங்கிறேன். ஊடகம் திருந்தனுமா? சமூக வலைத்தளங்களா? சமூக வலைத்தளங்கள் பொய் பரப்புவதை நாங்கள், எல்லா பேப்பரிலும் ஃபர்ஸ்ட் லீட் நியூஸ் மூன்று வயது குழந்தை, ஜோசப் விஜய் அரசாங்கத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது. அதைத் தட்டிக் கேட்க ஜோசப் விஜய்க்குத் துப்பில்லை எழுதுங்க. எழுதுங்க.

இல்லை இல்லை, நான் இந்த இஸ்யூவை விமர்சிக்கலை. இது நடக்கலைன்னு சொல்லலை. 22 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாயிருக்கு அப்படிங்கிறது பொய்ங்குறீங்களா? இல்லை இல்லை, நீங்களும் ஒத்துக்குறீங்க, நானும் ஒத்துக்குறேன், அப்புறம் என்ன வித்தியாசம் இருக்கு?.  குற்றவாளிகளைத் தண்டிக்க சார். இந்த அரசாங்கம் குற்றம் செய்பவர்கள் குறித்து ஒரு மென்டல் ஃபிக்ஸேஷனுக்குக் கூட வரலை, கற்பனையிலேயே திரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனாலே இது வந்து மற்றவங்களுக்கு யாருக்கும் அட்வாண்டேஜ் ஆயிடாது என்றார். 

இதையும் படிங்க: ராஜினாமா செய்தும் விடாத சிக்கல்..! திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share