உயர்சாதிக்காரர் தலைவராகலாம், ஒரு முஸ்லிம் பிச்சைக்காரராக வேண்டுமா?.. விளாசிய ஒவைசி..!
பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் தோல்விதான் காரணம் என்று ஹைதராபாத் எம்.பி. அசாசுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் தோல்விதான் காரணம். ஏனென்றால், இந்துக்களின் வாக்குகளை பாஜக ஒருங்கிணைக்கிறது என்று ஹைதராபாத் எம்.பி. அசாசுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாசுதீன் ஒவைசி பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இதையும் படிங்க: ஊட்டியில வெயில் கம்மி.. சென்னைக்கு வந்ததும் ஸ்டாலினுக்கு தெளிஞ்சிரும்.. சல்லி சல்லியா நொறுக்கிய அண்ணாமலை..!
பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது, வெற்றி பெற்று வருகிறது. இதற்கு காரணம், எதிர்க்கட்சிகளின் தோல்விதான். இந்துக்களின் 50 சதவீத வாக்குகளை ஒன்று சேர்த்து வாங்குவதால்தான் பாஜக வெற்றி பெறுகிறது. ஆனால் நான்தான் வாக்குகளைப் பிரிக்கிறேன், நான் பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கிறார்கள். என் கட்சிக்கும் பெரும்பாலும் முஸ்லிம் ஆதரவாளர்களே அதிகம் இருக்கிறார்கள்.
இதில் என்னை எப்படி குறை சொல்ல முடியும் சொல்லுங்கள். நான் ஹைதராபாத்தில் போட்டியிடலாம், அவுரங்காபாத் அல்லது கிஷான்கஞ்சில் போட்டியிடலாம், ஏதாவது இரு இடங்களில்தான் என்னால் வெல்ல முடியும். ஆனால், பாஜக 240 இடங்களில் வென்றதற்கு நான் எப்படி பொருப்பாக முடியும்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அரசியல் தலைமையின் சாயல் இருக்கும்போது, அது உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் அரசியல் குரல், அரசியல் தலைமைத்துவம் போன்ற சாயல் இருக்க வேண்டும் என்பதை மட்டும் நீங்கள் விரும்பவில்லை. நான் காங்கிரஸை மட்டும் சொல்லவில்லை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, பாஜக அனைத்துக் கட்சிகளையுமே கூறுகிறேன்.
யாதவர் தலைவராகலாம், முஸ்லிம்நபர் பிச்சைக்காரராக வேண்டுமா. உயர்சாதிக்காரர் தலைவராகலாம், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்காரராக வேண்டுமா. இது எப்படி நியாயமாகும் சொல்லுங்கள். இந்த தேசத்தை வடிவமைத்த தலைவர்கள் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பினர். இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்வி வரும்போது, நாங்கள் முன்வந்து இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நிற்போம்.
ஆனால், நம் வீடுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும், இல்லையா? ஏறக்குறைய நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மைக் குழுவாக 15% மக்கள்தொகை கொண்டவரக்ளாக முஸ்லிம்கள் இருந்தாலும், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்கள் பங்கு 4% மட்டும்தான். அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்குவதில்லை. ஏனென்றால், மக்கள் முஸ்லிம்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.
முஸ்லிம்கள் போன்ற பெரிய சமூகத்தை ஓரங்கட்டிவிட்டு பலவீனமாக வைத்துவிட்டு, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா “விக்சித் பாரத்” இலக்கை அடைய முடியாது. அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை வாக்கு வங்கிகளாகப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவர்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி கற்பிக்கவும், அவர்களை நியாயமாக நடத்தவும், அவர்களுக்கு வேலை வழங்கவும் பாடுபட வேண்டும். நாங்கள் வாக்காளர்களாக இருக்க விரும்பவில்லை என்பதே எங்கள் போராட்டம். நாங்கள் குடிமக்களாக இருக்க விரும்புகிறோம்.
இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நசுக்கப்பட்டவன் நான்தான்! கூட்டத்தில் இருபுறமும் நெறிப்பார்கள்!! எதிரணி கலாய்களுக்கு திருமா கூல் ரிப்ளை..!