×
 

அவங்க பண்றது சரியா? முதல் நாளில் இருந்தே பார்லிமென்ட்டை செயல்பட விடல.. பாஜக எம்.பி விளாசல்..!

முதல் நாளில் இருந்து நாடாளுமன்றத்தை செயல்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் அனுமதிக்கவில்லை என பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் குற்றம் சாட்டினார்.

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை காங்கிரஸ் சொல்லிட்டு எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஏனெனில் ஏராளமான மக்களின் வாக்குரிமையை இது பறிப்பதாக அமையும் என்று கூறி இருக்கின்றனர். இருப்பினும் முதலில் பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

அதன்படி பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடத்தப்பட்டு வருகிறது. 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளனர். 

இந்த நிலையில் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழ்நிலையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினர்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் இந்தியா கூட்டணி எம்பிக்கள்… உச்சகட்ட பரபரப்பு!

மேலும் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் அமலியில் ஈடுபடும் எதிர்க் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி இன்று பேரணி நடந்த இருப்பதாக அறிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாக சென்று இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகை விட முடிவு செய்துள்ளனர்.

இந்தியா கூட்டணி எம்பிகளின் இந்த பேரணி குறித்து பேசிய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால், முதல் நாளிலிருந்தே அவை செயல்பட  அவர்கள் அனுமதிக்கவில்லை என கூறினார்.

 ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விதத்திற்கு, தேர்தல் ஆணையம் ஆதாரங்களைக் கேட்பதாகவும் தெரிவித்தார். உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவிடம் 2 EPIC அட்டைகள் இருப்பதாகவும் கூறினார். பொதுமக்களின் நலனுக்கான திட்டங்களைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி திடீர் விலகல்.. அரசியல் களத்தில் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share