" பிரதமர் மோடிக்கு முன்னாடி நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல..." விஜயை மறைமுகமாக விளாசிய நயினார் நாகேந்திரன் ...!
தமிழ்நாட்டில் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று சில பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜயை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் சண்டையா அதற்கு பஞ்சாயத்து பேசி முடிப்பது நமது பிரதமர் மோடி தான். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் இப்போது இந்தியாவுக்கு விதித்த வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைப்பதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பார்த்து பயந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர் விதித்த வரியை குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார் இப்படி மாபெரும் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று சில பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜயை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்: யார் வரவேண்டும் என்பது முக்கியம் அதைவிட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் திமுக ஒருபோதும் வரக்கூடாது.
இதையும் படிங்க: "ஒரு கவுன்சிலர் கூட இல்ல... பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்க நினைப்பா?" - ஆதவை பொளந்தெடுத்த நயினார் நாகேந்திரன்...!
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் பள்ளியில் மரத்தடியில் மாணவர்கள் படிக்கும் நிலைதான் இருக்கிறது. தேர்தல் வந்தால் தான் திமுக காரர்கள் எட்டி பார்ப்பார்கள்.
ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் அந்த பணத்தை வழங்கினார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது தனித்தனியாக இருந்தோம். இன்று சேர்ந்து வந்திருக்கின்றோம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக சேர்ந்திருந்தால் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்போம். தற்போது சேர்ந்திருப்பதால் 234 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரே எண்ணம் அவரது மகனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் சண்டையா அதற்கு பஞ்சாயத்து பேசி முடிப்பது நமது பிரதமர் மோடி தான்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் நீ என்ன வரி போடுவது என்னுடைய நாட்டு பொருட்களை உன்னுடைய நாட்டிற்கு அனுப்ப மாட்டேன் என்று சொல்லி ரஷ்யா ஐரோப்பிய போன்ற நாடுகளுக்கு சென்றார். இன்று இங்க இருக்கக்கூடிய பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் தற்பொழுது இந்தியாவுக்கு விதித்த வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைப்பதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பார்த்து பயந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர் விதித்த வரியை குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார் இப்படி மாபெரும் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார்.
அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று சில பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு வந்தவுடன் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடுகிறார். அதன் பிறகு செருப்பு ஈ வீசப்படுகிறது விளக்கு அணைக்கப்படுகிறது லத்தி சார்ஜ் நடத்தப்படுகிறது.
இதனால் தள்ளுமுள்ளாகி குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் நசுங்கி செத்துப் போனார்கள். யாரை காப்பாற்றுவதற்கு இரவோடு இரவாக வருகை தந்து 41 பேருக்கும் உடற்குறு ஆய்வு செய்து முடித்துவிட்டு சென்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். அவர் முன்னாள் அமைச்சரை பாதுகாக்க இதுபோன்ற செய்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதுள்ளது. ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் கண்ட்ரோலில் இல்லை. போதை கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது..
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை யாரையோ மூன்று பேரை சுட்டு பிடித்து பாவம் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். உண்மையான குற்றவாளியை கண்டறிய வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணியையும் அவருடன் இருந்த நண்பரையும் நேரில் நிற்க வைத்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய சொல்லிருக்க வேண்டும்.
என்னுடைய பதவிக்காலம் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார். ஆமாம் பாஜகவை பொறுத்தவரை மூன்று ஆண்டுகள்தான் பதவி அதன்படி எனக்கு பதவி ஆறுமாத காலம் முடிந்து விட்டது இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தான் எனக்கு பதவி இருக்கிறது ஆனால் அமைச்சர் சேகர்பாபுக்கு இன்னும் இரண்டரை மாதம் தான் இருக்கிறது. வீட்டுக்கு போக கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது அமைச்சரவைக்கும் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
சேகர்பாபுவும் நானும் நண்பர்கள் தான் இரவு கூட ஏன் இப்படி பேசினாய் என்று தொலைபேசியில் கேட்பார். ஆனால் அவர் வேறு கட்சி நான் வெறும் கட்சி. ஆனால் நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்.
7000 கோடி ரூபாய் மதிப்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த நான்காண்டு காலம் திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை 7000 கோடி திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுவிட்டது.
11 மருத்துவ கல்லூரிகளை தந்தது பிரதமர் மோடி அதனைப் பெற்றுக் கொடுத்தது அன்றைக்கு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இதை யாராலும் மறுக்க முடியாது.
மக்களுக்காக சேவை செய்யக்கூடிய கட்சி மக்களுக்காக சேவை செய்யக்கூடிய கூட்டணி. தமிழ்நாடு மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார்கள் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி தான் கொடுத்தார்.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை தாமரை அல்லது தோழமைக் கட்சியின் சின்னங்களில் போட்டியிட கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அந்த சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தேடி தர வேண்டும் என்று பேசினார்.
இதையும் படிங்க: உண்டியலுக்கும் பாதுகாப்பு இல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்ல... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்..!