×
 

பாக்., ராணுவத்தை சம்பவம் செய்த பலூச் படை... கதிகலங்கி நிற்கும் அசிம் முனீர்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் இந்தியாவை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ லாரியை கையெறி குண்டு வீசி பலூச் விடுதலைப் படை வெடிக்கச் செய்ததில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்நாட்டு ராணுவ ஜெனரல் அசிம் முனீர் அதிர்ச்சியடைந்தார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் இந்தியாவை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையில், பலுசிஸ்தானின் கெஷ்தாரி பகுதியில், பலூச் விடுதலைப் படையினர் பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கியுள்ளனர். அங்கு, அமீர் போஸ்ட், அலி கான் தளத்திற்கு இடையே பாகிஸ்தான் ராணுவ வாகனம் கையெறி குண்டு உதவியுடன் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை கட்டளை தளபதி தாரிக் இம்ரான் உட்பட ஆறு வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட வீரர்களில் தாரிக் இம்ரான், நாயக் ஆசிப், சுபேதார் பாரூக், நாயக் மஷ்கூர், சிப்பாய் வாஜித், மற்றொரு சிப்பாய் காஷிஃப் ஆகியோர் அடங்குவர். பலுசிஸ்தானில் அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மேலும் பலுச் விடுதலை ராணுவம் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: போர் ஒத்திகை என்றால் என்ன..? தேசிய அளவில் என்ன நடக்கும்..? தெரிந்து கொள்ளுங்கள்..!

நேற்று முன்தினம் பலூசிஸ்தானின் கலாட் மாவட்டத்தின் மோங்கோச்சர் பகுதியில் பலூச் விடுதலை இராணுவம்  ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. குவெட்டா-கராச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்தது. அரசின் பல கட்டிடங்களுக்கு தீ வைத்தது. 

பலூச்சின் ஃபதே படையின் ஆயுதமேந்திய போராளிகள் போக்குவரத்தை நிறுத்தி பேருந்துகள், தனியார் வாகனங்களைத் சோதனை செய்ததன. பின்னர் போராளிகள், நீதித்துறை வளாகம், பாகிஸ்தான் தேசிய வங்கி உள்ளிட்ட பல முக்கிய அரசு அலுவலகங்களைக் கைப்பற்றி தீ வைத்தனர். பின்னர் பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழைந்து, போக்குவரத்தை மீட்டெடுத்து, எதிர் நடவடிக்கையைத் தொடங்கினர்.

மேலும் ஒரு சம்பவத்தில், பலூச் போராளிகள் கடானி சிறையில் இருந்து குவெட்டாவிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற ஒரு போலீஸ் வேனை வழிமறித்தனர். குறைந்தது 10 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஐந்து போலீசார் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். வேன் ஓட்டுநர், இரண்டு சாதாரண உடையில் இருந்த அதிகாரிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
 

இதையும் படிங்க: இந்தியா- பாகிஸ்தான் போர் உறுதி... தேதி குறித்த ராணுவம்..! பீதியில் மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share