×
 

செமிகண்டக்டர் சிப் உற்பத்திக்கு ரூ.1.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு! உலக நாடுகளுக்கு போட்டி தரும் இந்தியா!

இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0' திட்டத்திற்கு ரூ.1.2 லட்சம் கோடி | நிதி ஒதுக்க நிதியமைச்சகம் ஒப்புதல்.

இந்தியாவில் செமிகண்டக்டர் (Semiconductor) சிப் உற்பத்தியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 'இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0' (ISM 2.0) திட்டத்திற்கு ₹1.2 லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய நிதியமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவைச் சர்வதேச செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மையமாக (Global Hub) மாற்றுவதே இத்திட்டத்தின் முதன்மை இலக்காகும். சிப் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் அதன் விநியோகச் சங்கிலியை (Supply Chain) உள்நாட்டிலேயே வலுப்படுத்துவதன் மூலம் இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் மிஷனின் முதல் கட்டத் திட்டத்திற்காக (ISM 1.0) ஏற்கனவே ₹76,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது இரண்டாம் கட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ₹1.2 லட்சம் கோடி என்பது, முன்னரை விடப் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இத்துறையில் இந்தியாவின் அதீத வளர்ச்சியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் புதிய ஃபேப் (Fab) தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், வாகன உற்பத்தி, மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் இந்தியா சுயசார்பு அடைய இது பெரும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மஹால் படத்துடன் விளம்பரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share