×
 

வருங்கால மாப்பிள்ளையுடன் எஸ்கேப்பான மணமகளின் தாயார்… தொழிலதிபர் கதறல்..!

வருங்கால மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்தது குடும்பங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு 40 வயது பெண் தனது மகளின் வருங்கால கணவருடன் ஓடிவிட்டார். திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த நிலையில், திருமண நிகழ்வுகள் தலைகீழாக மாறியது.

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் அப்னா தேவி என்ற அந்தப் பெண் ரூ.3 லட்சம் ரொக்கம், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றார். இது அவரது மகளின் திருமணத்திற்காக சேமிக்கப்பட்டது.

குடும்பத்தினருக்குத் தெரியாமல், மணமகன் தனது வருங்கால மாமியாரைக் காதலித்து வந்ததால், இருவரும் ஓடிப்போகத் திட்டமிட்டனர். ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிகைகள் கொடுக்கப்பட்டு வந்தன. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் தொடங்க இருந்தன. ஆனால் அதற்கு முன்பே வருங்கால மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்தது குடும்பங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. போலீசாருக்கு அதிகரித்த பதற்றம்..!

மணமகளின் தந்தை ஜிதேந்திர குமார் பெங்களூருவில் தொழிலதிராக இருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எனது மனைவி அப்னா தேவி மகளின் மணமகனுடன் ஓடிவிட்டார். இது எங்கள் குடும்பத்தை நாசமாக்கியது. என் மனைவி எங்கள் மகளின் வருங்கால கணவருடன் மணிக்கணக்கில் பேசுவாள். ஆனால் அது இப்படி முடிவடையும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அவள் எங்களை நாசமாக்கிவிட்டாள்" என்று குமார் கூறினார்.

அப்னாதேவிக்கு தேவிக்கு கிட்டத்தட்ட 40 வயது. அவர் தனது குடும்பத்துடன் மட்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். வருங்கால மணமகன் பக்கத்து கிராமத்தில் வசிப்பவர். மணமகன் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டை விட்டு வெளியேறி, தனது தந்தையிடம் தான் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அவர் சென்றதும், அவரது தந்தை கவலைப்பட்டு மணமகளின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டுள்ளார். 

ஆனால் மணமகன் அங்கு இல்லை. மணமகளின் தாயாரும் இல்லை என்பது தெரிய வந்தது. இந்த அத்துமீறலை சந்தேகித்த சுஷாந்தின் தந்தை மட்ராக் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தார். ஓடிப்போன பிறகு, அவர்கள் தங்கள் மொபைல் போன்களையும் அணைத்துவிட்டனர்.

சம்பவத்தை உறுதிப்படுத்திய காவல் நிலைய அதிகாரி அரவிந்த் குமார், "எங்களுக்கு புகார் வந்துள்ளது. தம்பதியினரைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி.. நடவடிக்கை எடுக்கப்படும்.. அமைச்சர் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share