×
 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானர் பி.ஆர்.கவாய்..! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி..!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார்.

சஞ்சீவ் கண்ணா ஓய்வைத் தொடர்ந்து பூஷன் ராமகிருஷ்ணா கவாய் எனும்  பி.ஆர்.கவாய், இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீசன் பிரதமர் மோடி மக்களவை சபாநாயகர் ஊம்பிரில்லா உள்ளிட்டோ கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பி. ஆர். காவாய் 1985 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார். நீதிபதி எம். ஹிதாயத்துல்லா மற்றும் நீதிபதி ஷரத் பாப்டே ஆகியோரைத் தொடர்ந்து, நாக்பூரில் இருந்து இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் மூன்றாவது நபர் என்ற பெருமையை பி.ஆர்.கவாய் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி.. மே 14ம் தேதி பதவியேற்கிறார் பிஆர் கவாய்..!

இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் கவாய் ஆறு மாத பணிக்குப் பிறகு 2025 நவம்பர் 23ல் ஓய்வு பெறுவார்.

இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்... யார் இவர்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share