24 இடங்களில் வெட்டு... தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்... வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்...!
சங்கராபுரத்தில் என்பது சென்ட் நிலத்திற்காக தங்கை மீது மிளகாய் பொடி தூவி கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் அண்ணன் காந்தகுமார் உட்பட நான்கு பேர் கைது மேலும் இருவருக்கு போலீசார் வலைவீச்சு
உடன் பிறந்த தங்கையை சொத்துக்காக அண்ணனை 24 இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்ததாக வாக்குமூலம் - 3 வாரங்களாக திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியதாகவும் வாக்குமூலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புதிய பேரூராட்சி அலுவலகம் அருகே தீபா ஆர்த்தி தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்த நிலையில் தீபா ஆர்த்திக்கு அவரது தாய் அம்பிகா தனக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபா ஆர்த்தியிடம் அவரது காந்தக்குமார் அந்த 80 சென்ட் நிலத்தில் தனக்கும் பங்கு வழங்குமாறு கேட்டு தொடர்ந்து பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் தீபா ஆர்த்தி தனக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட 80 செண்ட் நிலத்தை தனது மகன்கள் பேரில் தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்துள்ளார். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தீபா ஆர்த்தியின் தாயார் அம்பிகா உயிரிழந்த நிலையில் தீபா ஆர்த்தியின் வீட்டிற்கு மது போதையில் அவரது அண்ணன் காந்தகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் வந்து மீண்டும் 80 சென்ட் சொத்து குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING திருச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியைக் கொன்ற கணவனுக்கு வலைவீச்சு...!
ஒரு கட்டத்தில் காந்தகுமார் தன் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தனது தங்கை தீபா ஆர்த்தி மீது தூவி அவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தொடர்ந்து அதை தடுக்க வந்த தீபா ஆர்த்தியின் கணவர் பாபுவையும் அவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு இந்த கொலை குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைத்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பாலபந்தல் வனப்பகுதியில் பதுங்கி இருந்த இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தகுமார் மற்றும் ரமேஷ்குமார், வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சரத்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அகமது மற்றும் தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் தீபா ஆர்த்தியின் வீட்டிற்குள் புகுந்த காந்தகுமார் உள்ளிட்ட ஆறு பேர் தீபா ஆர்த்தியை சரமாரியாக தாக்கி சுமார் 24 இடங்களில் கத்தியால் வெட்டியதாகவும், அதில் தீபா ஆர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இதனை தடுக்க முயன்ற அவரது கணவர் பாபுவின் வெட்டி விட்டு தப்பி ஓடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
காந்தகுமார் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கொலையில் ஈடுபட்டதாக அவரது நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய நான்கு கத்திகளை பழையனூர் ஏரியில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்
. தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் நடைபெற்ற 36 மணி நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: #BREAKING “என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” - விருதுநகரில் வீடு புகுந்து அம்மா, மகளுக்கு அரிவாள் வெட்டு... நடந்தது என்ன?